search icon
என் மலர்tooltip icon

    கார்

    மே மாத விற்பனையில் அசத்திய இன்னோவா க்ரிஸ்டா
    X

    மே மாத விற்பனையில் அசத்திய இன்னோவா க்ரிஸ்டா

    • ஒட்டுமொத்த விற்பனையில் இன்னோவா க்ரிஸ்டா மட்டும் 25 சதவீத பங்குகளை பெற்றுள்ளது.
    • டொயோட்டா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் இரண்டாவது கார் மாடல் ஆகும்.

    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் டீசல் என்ஜின் கொண்ட இன்னோவா க்ரிஸ்டா மாடல் மே மாத விற்பனையில் அதிக வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்திய சந்தையில் ஒட்டுமொத்த டொயோட்டா வாகனங்கள் விற்பனையில் இன்னோவா க்ரிஸ்டா மட்டும் 25 சதவீத பங்குகளை பெற்று அசத்தியுள்ளது.

    மே 2023 மாதத்தில் மட்டும் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் 4 ஆயிரத்து 786 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இதன் வருடாந்திர விற்பனை 75 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. கடந்த ஆண்டு மே மாதத்தில் டொயோட்டா நிறுவனம் 2 ஆயிரத்து 737 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. இதன் மூலம் டொயோட்டா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் இரண்டாவது கார் மாடல் என்ற பெருமையை இன்னோவா க்ரிஸ்டா பெற்று இருக்கிறது.

    கடந்த மே மாதம் அதிகம் விற்பனையான கிளான்சா மாடலை விட இன்னோவா க்ரிஸ்டா 393 யூனிட்களே குறைவாக விற்பனையாகி உள்ளது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இன்னோவா ஹைகிராஸ் மாடல் கடந்த மாதத்தில் 2 ஆயிரத்து 990 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. பழைய மாடல் என்ற வகையிலும் இன்னோவா க்ரிஸ்டா, புதிய எம்பிவி-யான ஹைகிராஸ்-ஐ விற்பனையில் முந்தியுள்ளது.

    இன்னோவா க்ரிஸ்டா மாடலில் 2.4 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட டீசல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 145 ஹெச்பி பவர், 343 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடலில் 2.0 லிட்டர், 4 சிலிண்டர் NA பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 172 ஹெச்பி பவர், 205 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் CVT கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இதன் ஹைப்ரிட் மாடலில் 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட அட்கின்சன் சைக்கிள் பெட்ரோல் என்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் உள்ளது.

    இந்த என்ஜின் 184.8 ஹெச்பி பவர், 206 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் பெட்ரோல் மாடலில், eCVT கியர்பாக்ஸ் மட்டுமே வழங்கப்படுகிறது. டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் மாடலின் விலை ரூ. 18 லட்சத்து 55 ஆயிரம் என்று துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 29 லடச்த்து 99 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    Next Story
    ×