search icon
என் மலர்tooltip icon

    கார்

    இந்தியாவில் அறிமுகமான இன்னோவா புது வேரியண்ட் - என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
    X

    இந்தியாவில் அறிமுகமான இன்னோவா புது வேரியண்ட் - என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?

    • புதிய GX+ வேரியண்ட் அதிக அம்சங்களுடன் கிடைக்கிறது.
    • இந்த என்ஜின் 150 ஹெச்.பி. பவர், 343 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் தனது இன்னோவா காரின் புது "GX+" வேரியண்ட்-ஐ அறிமுகம் செய்தது. புதிய வேரியண்ட் விலை ரூ. 21 லட்சத்து 39 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய GX மற்றும் VX வேரியண்ட்களுடன் ஒப்பிடும் போது புதிய GX+ வேரியண்ட் அதிக அம்சங்களுடன் கிடைக்கிறது.

    அதன்படி புதிய வேரியண்டில் ரியர் கேமரா, ஆட்டோ ஃபோல்டு மிரர், டேஷ் கேமரா, டைமண்ட் கட் அலாய் வீல்கள், பிரீமியம் இருக்கை மேற்கவர்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த வேரியண்ட் ஏழு மற்றும் எட்டு பேர் அமரக்கூடிய இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 21 லட்சத்து 39 ஆயிரம் மற்றும் ரூ. 21 லட்சத்து 44 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


    புதிய அம்சங்கள் தவிர இன்னோவா க்ரிஸ்டா GX+ வேரியண்டின் மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில், இந்த வேரியண்டிலும் 2.4 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 150 ஹெச்.பி. பவர், 343 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் இன்னோவா க்ரிஸ்டா மாடலின் விலை ரூ. 19 லட்சத்து 99 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 26 லட்சத்து 30 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த காருக்கு நேரடி போட்டியை ஏற்படுத்தும் மாடல் எதுவும் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கவில்லை. எனினும், கியா கரென்ஸ் மற்றும் மஹிந்திரா மராசோ உள்ளிட்டவை இதற்கு போட்டியாக அமைகின்றன.

    Next Story
    ×