search icon
என் மலர்tooltip icon

    கார்

    அசத்தல் அப்கிரேடுகள்.. இன்னோவா ஹைகிராஸ் லிமிடெட் எடிஷன் அறிமுகம்
    X

    அசத்தல் அப்கிரேடுகள்.. இன்னோவா ஹைகிராஸ் லிமிடெட் எடிஷன் அறிமுகம்

    • லிமிடெட் எடிஷன் மாடல் 7 மற்றும் 8 பேர் அமரக்கூடிய இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது.
    • இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 20 லட்சத்து 22 ஆயிரம் ஆகும்.

    டொயோட்டா நிறுவனம் தனது இன்னோவா ஹைகிராஸ் மாடலின் புதிய லிமிடெட் எடிஷன் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய லிமிடெட் எடிஷன் மாடல் GX வேரியண்டை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய லிமிடெட் எடிஷன் மாடலின் விலை ரூ. 20 லட்சத்து 07 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 20 லட்சத்து 22 ஆயிரம், எக்ஸ் ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இது இன்னோவா ஹைகிராஸ் ஸ்டாண்டர்டு GX வேரியண்டை விட ரூ. 40 ஆயிரம் அதிகம் ஆகும். கூடுதல் விலை காரணமாக இந்த மாடலின் வெளிப்புறம் மற்றும் உள்புறத்தில் காஸ்மடிக் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி கிரில் பகுதியில் க்ரோம் ஃபினிஷ் செய்யப்பட்டது. இத்துடன் பிளாட்டினம் வைட் நிற ஃபினிஷ் செய்யப்பட்டது.

    உள்புறம் டேஷ்போர்டில் சாஃப்ட்டச், செஸ்ட்நட் பிரவுன் ஃபினிஷ், டோர் ட்ரிம்களில் பிளாக் நிற பிளாஸ்டிக் வழங்கப்பட்டுள்ளது. இன்னோவா ஹைகிராஸ் GX லிமிடெட் எடிஷன் மாடல் 7 மற்றும் 8 பேர் அமரக்கூடிய இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது. இந்த வேரியண்ட் 2.0 லிட்டர், NA பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது. இத்துடன் CVT கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    இதில் உள்ள என்ஜின் 172 ஹெச்.பி. பவர், 205 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. ஹைப்ரிட் வசதி இல்லாத மாடலையும் வாடிக்கையாளர்கள் வாங்க வேண்டும் என்பதற்காக டொயோட்டா புதிய லிமிடெட் எடிஷன் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த மாடல் டிசம்பர் மாத இறுதி அல்லது ஸ்டாக் இருக்கும் வரை மட்டுமே விற்பனை செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

    Next Story
    ×