search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    வெளியீட்டுக்கு முன் விற்பனையகம் வரத்துவங்கிய மாருதி Fronx
    X

    வெளியீட்டுக்கு முன் விற்பனையகம் வரத்துவங்கிய மாருதி Fronx

    • மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய Fronx எஸ்யுவி மாடல் பலேனோ, கிராண்ட் விட்டாரா மாடல்களின் இடையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
    • புதிய Fronx எஸ்யுவி 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.2 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய Fronx கிராஸ்ஒவர் மாடல் இந்திய விற்பனையகங்களை வரத்துவங்கி இருக்கிறது. புதிய Fronx மாடலின் இந்திய விலை விவரங்கள் மார்ச் மாத வாக்கில் அறிவிக்கப்பட உள்ளன. சப்காம்பேக்ட் கிராஸ்ஒவர் எஸ்யுவி மாடலான மாருதி Fronx மாருதி பலேனோ காரை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய Fronx மாடல் நிசான் மேக்னைட், ரெனால்ட் கைகர் மற்றும் பிரெஸ்ஸா மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    இந்திய சந்தையில் மாருதி Fronx மாடல் மாருதியின் பிரீமியம் நெக்சா ஷோரூம்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதுதவிர புதிய மாருதி Fronx மாடல் தேர்வு செய்யப்பட்ட நெக்சா ஷோரூம்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. காரின் வெளிப்புறம் புதிய Fronx மாடலில் ஸ்ப்லிட் எல்இடி ஹெட்லைட்கள், கிராண்ட் விட்டாரா மாடலில் உள்ளதை போன்ற கிரில் டிசைன் கொண்டிருக்கிறது.

    காரின் பின்புறம் கனெக்டெட் எல்இடி டெயில்லைட்கள், ஸ்லோபிங் ரூஃப்லைன், ஃபௌக்ஸ் ஸ்கிட் பிளேட் பம்ப்பரின் கீழ்புறத்தில் உள்ளது. இவை காருக்கு ஸ்போர்ட் தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளன. பலேனோ போன்றே Fronx மாடலிலும் 9 இன்ச் டச் ஸ்கிரீன், ஆர்கமிஸ் டியூன் செய்யப்பட்ட பிரீமியம் ஆடியோ சிஸ்டம், வயர்லெஸ் போன் சார்ஜர், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, குரூயிஸ் கண்ட்ரோல், 6 ஏர்பேக், 360 டிகிரி கேமரா வழங்கப்பட்டு இருக்கின்றன.

    புதிய மாருதி Fronx மாடல் 1.2 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின், 1 லிட்டர் பூஸ்டர்ஜெட் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதன் 1.2 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின் 90 பிஎஸ் பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன், 5 ஸ்பீடு AMT டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் கிடைக்கும் 1 லிட்டர் பூஸ்டர்ஜெட் என்ஜின் 100 பிஎஸ் பவர், 148 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்பட்டு உள்ளது. இந்திய சந்தையில் புதிய மாருதி Fronx விலை ரூ. 8 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×