search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    அடுத்த வாரம் இந்தியா வரும் புது ஹோன்டா பைக்..!
    X

    அடுத்த வாரம் இந்தியா வரும் புது ஹோன்டா பைக்..!

    • ஹோன்டா நிறுவனத்தின் புதிய மோட்டார்சைக்கிள் இந்திய வெளியீட்டு விவரங்கள் லீக் ஆகி இருக்கிறது.
    • புதிய பைக் 150-180சிசி பிரிவில் நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது.

    ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் ஆகஸ்ட் 2-ம் தேதி புதிய மோட்டார்சைக்கிள் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய மாடல் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. இந்த மாடல் 150-180சிசி பிரிவில் நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது.

    இந்த பிரிவில் ஹோன்டா நிறுவனம் 162.7சிசி மற்றும் 184.4சிசி என இரண்டு என்ஜின்களை கொண்டிருக்கிறது. இதில் 162.7சிசி என்ஜின் ஹோன்டா யுனிகான் 160 மாடலிலும் மற்றொரு என்ஜின் சிபி ஹார்னெட் 2.0 மாடலிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மாடலின் அறிமுகம் மட்டும் அடுத்த வாரம் நடைபெறுகிறது.

    இதன் வெளியீடு வரும் வாரங்களில் துவங்கும் என்று தெரிகிறது. இந்த மாடல் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் பிரான்டிங்கிலேயே அறிமுகம் செய்யப்படலாம். முன்னதாக இதேபோன்ற நடைமுறை ஷைன் 100 மாடலிலும் பின்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த மாடலில் என்ஜின் செயல்திறனில் எவ்வித மாற்றமும் இருக்காது என்றே கூறப்படுகிறது.

    ஹோன்டா யுனிகான் மாடலில் உள்ள 162.7சிசி என்ஜின் 12.73 ஹெச்பி பவர், 14 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. ஹோன்டா ஹார்னெட் 2.0 மாடலில் உள்ள 184.4சிசி என்ஜின் 17.03 ஹெச்பி பவர், 16.1 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    Next Story
    ×