search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    ஹோண்டாவின் மூன்று எலெக்ட்ரிக் எஸ்யுவிக்கள் அறிமுகம் - வெளியீடு எப்போ தெரியுமா?
    X

    ஹோண்டாவின் மூன்று எலெக்ட்ரிக் எஸ்யுவிக்கள் அறிமுகம் - வெளியீடு எப்போ தெரியுமா?

    • சீனாவில் மட்டும் பத்து எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய ஹோண்டா நிறுவனம் திட்டம்.
    • ஹோண்டா எலெக்ட்ரிக் காரில் ஹோண்டா கனெக்ட் 4.0 கனெக்டட் கார் தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது.

    ஹோண்டா நிறுவனம் மூன்று எலெக்ட்ரிக் எஸ்யுவி கான்செப்ட்களை 2023 ஷாங்காய் மோட்டார் விழாவில் காட்சிப்படுத்தி இருக்கிறது. இவை e:N சீரிஸ், e:NP2 ப்ரோடோடைப் மற்றும் e:NS2 ப்ரோடோடைப் என்று அழைக்கப்படுகின்றன. இதில் இரண்டு மாடல்கள் உற்பத்திக்கு தயார் நிலையில் உள்ளன. இவற்றின் விற்பனை அடுத்த ஆண்டு சீனாவில் துவங்க இருக்கிறது.

    இரு எலெக்ட்ரிக் கார்களுடன் புதிய e:N எஸ்யுவி கான்செப்ட் கிட்டத்தட்ட ஷோ கார் போன்றதாகும். 2027 ஆண்டிற்குள் சீனாவில் மட்டும் பத்து எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும் 2035 ஆண்டிற்குள் முழுமையான எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தியாளராக வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளது.

    தற்போது காட்சிப்படுத்தப்பட்டு இருப்பதில் e:NP2 மற்றும் e:NS2 மாடல்கள் உற்பத்திக்கு கிட்டத்தட்ட தயார் நிலையில் உள்ளன. இவை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளன. e:N எஸ்யுவி கான்செப்ட் ஹோண்டா நிறுவனத்தின் மூன்றாம் கட்ட எலெக்ட்ரிக் வாகனங்கள் ஆகும். ஹோண்டா எலெக்ட்ரிக் காரில் ஹோண்டா கனெக்ட் 4.0 கனெக்டட் கார் தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது.

    இரண்டு ஹோண்டா எலெக்ட்ரிக் வாகனங்களில் வங்கப்பட இருக்கும் தொழில்நுட்ப அம்சங்கள் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. சீன அறிமுகத்தைத் தொடர்ந்து இந்த எஸ்யுவி-க்களின் விலை விவரங்கள், மற்ற நாடுகளில் வெளியீடு உள்ளிட்ட தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×