search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    ரூ. 18.9 லட்சத்தில் புது எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்த மஹிந்திரா
    X

    ரூ. 18.9 லட்சத்தில் புது எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்த மஹிந்திரா

    • பிப்ரவரி அல்லது மார்ச் மாத வாக்கில் துவங்கும் என தெரிகிறது.
    • இந்த கார் 550 கி.மீ. வரையிலான ரேஞ்ச் வழங்கும்.

    மஹிந்திரா நிறுவனத்தின் முற்றிலும் புதிய BE 6e எலெக்ட்ரிக் மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய மஹிந்திரா BE 6e காரின் விலை ரூ. 18.9 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த எலெக்ட்ரிக் காரின் முன்பதிவுகள் விரைவில் துவங்க உள்ள நிலையில், வினியோகம் அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாத வாக்கில் துவங்கும் என தெரிகிறது.

    புதிய BE 6e மாடலின் தோற்றம் அதன் கான்செப்ட் வெர்ஷனை போன்றே காட்சியளிக்கிறது. இதன் ஸ்டைலிங் கூர்மையாக காட்சியளிக்கிறது. இந்த காரின் வெளிப்புற தோற்றம் டூயல் டோன் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளதை போன்ற தோற்றம் கொண்டுள்ளது. இதில் சி வடிவ எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் வழங்கப்பட்டுள்ளன.


    பின்புறம் எல்.இ.டி. டெயில் லைட்கள் உள்ளன. இந்த காரின் பம்ப்பர் டிஃப்யூசர் போன்ற எஃபெக்ட் வழங்குகிறது. இந்த காரில் 19 இன்ச் ஏரோ ஆப்டிமைஸ் செய்யப்பட்ட வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரின் கிரவுன்ட் கிளியரன்ஸ் 207mm ஆகும்.

    இந்த கார் 59 கிலோவாட் ஹவர் மற்றும் 79 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி ஆப்ஷன்களை சப்போர்ட் செய்யும் திறன் கொண்டுள்ளது. இதில் 79 கிலோவாட் ஹவர் யூனிட் 550 கிலோமீட்டர்கள் வரையிலான ரேஞ்ச் வழங்குகிறது. இதில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார்கள் 288 ஹெச்பி பவர், 380 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளன.

    புதிய மஹிந்திரா BE 6e மாடல் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 6.7 நொடிகளில் எட்டிவிடும். இத்துடன் 175 கிலோவாட் ஹவர் டிசி பாஸ்ட் சார்ஜர் மூலம் காரை 20-இல் இருந்து 80 சதவீதம் வரை 20 நிமிடங்களுக்குள் சார்ஜ் ஏற்ற முடியும்.

    Next Story
    ×