search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    ரூ. 11.39 லட்சம் விலையில் 9 சீட்டர் பொலிரோ நியோ பிளஸ் இந்தியாவில் அறிமுகம் - என்ன ஸ்பெஷல்?
    X

    ரூ. 11.39 லட்சம் விலையில் 9 சீட்டர் பொலிரோ நியோ பிளஸ் இந்தியாவில் அறிமுகம் - என்ன ஸ்பெஷல்?

    • புதிய எஸ்.யு.வி. மாடல் மூன்று நிறங்களில் கிடைக்கிறது.
    • புதிய 2.2 லிட்டர் எம்ஹாக் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது.

    மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பொலிரோ நியோ பிளஸ் மாடலை அறிமுகம் செய்தது. மூன்றடுக்கு இருக்கைகள் கொண்ட பொலிரோ நியோ பிளஸ் எஸ்.யு.வி. தற்போது இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 11 லட்சத்து 39 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது.

    இந்த கார் 2-3-4 இருக்கை அமைப்புடன் மொத்தம் ஒன்பது பேர் பயணம் செய்யக்கூடிய வகையில் கிடைக்கிறது. பொலிரோ நியோ பிளஸ் மாடல் P4 மற்றும் P10 என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 11 லட்சத்து 39 ஆயிரம் மற்றும் ரூ. 12 லட்சத்து 49 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


    பொலிரோ நியோ பிளஸ் 7 சீட்டர் வேரியண்ட் உடன் ஒப்பிடும் போது புதிய நியோ பிளஸ் மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 49 ஆயிரம் வரை அதிகம் ஆகும்.

    புதிய எஸ்.யு.வி. மாடல்- நபோலி பிளாக், மஜெஸ்டிக் சில்வர் மற்றும் டைமண்ட் வைட் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இந்த காரின் கேபினில் பிரீமியம் இத்தாலிய இண்டீரியர்கள், 9 இன்ச் அளவில் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ப்ளூடூத், யு.எஸ்.பி. கனெக்டிவிட்டி வழங்கப்படுகிறது.

    மஹிந்திரா பொலிரோ நியோ பிளஸ் மாடலில் புதிய 2.2 லிட்டர் எம்ஹாக் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 118 ஹெச்.பி. பவர் மற்றும் 280 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

    Next Story
    ×