search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    Mahindra Thar Roxx
    X

    ரூ. 12.99 லட்சத்தில் அறிமுகமான தார் ராக்ஸ்.. என்னென்ன ஸ்பெஷல்?

    • தார் ராக்ஸ் மாடல் இருவித எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
    • தார் ராக்ஸ் மாடல் ஆட்டோமேடிக், மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    மஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தார் ராக்ஸ் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய 5 கதவுகள் கொண்ட தார் ராக்ஸ் மாடலின் விலை ரூ. 12 லட்சத்து 99 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டீசல் வேரியண்ட் விலை ரூ. 13 லட்சத்து 99 ஆயிரம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    புதிய தார் ராக்ஸ் மாடலில் 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட எம்-ஸ்டேலியன் டர்போ பெட்ரோல் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 160 ஹெச்பி பவர், 330 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

    இத்துடன் 2.2 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட, எம்ஹாக் டீசல் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த யூனிட் 150 ஹெச்பி பவர், 330 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இரு மாடல்களுடன் 6 ஸ்பீடு மஏனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.


    2024 மஹிந்திரா தார் ராக்ஸ் மாடலில் புதிய கிரில், சி வடிவம் கொண்ட எல்இடி டிஆர்எல்கள், ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், வட்ட வடிவம் கொண்ட ஃபாக் லைட்கள், டூயல் டோன் அலாய் வீல்கள், பின்புறம் எல்இடி டெயில் லைட்கள், டெயில்கேட்டில் ஸ்பேர் வீல் பொருத்தப்பட்டு இருக்கிறது.

    உள்புறம் புதிய 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, டிஜிட்டல் கலர் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், வென்டிலேட் செய்யப்பட்ட முன்புற இருக்கைகள், பானரோமிக் சன்ரூஃப், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், பின்புற ஏசி வென்ட்கள் வழங்கப்படுகின்றன.

    இந்திய சந்தையில் புதிய தார் ராக்ஸ் மாடல் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், ஹோண்டா எலிவேட், எம்ஜி ஆஸ்டர், மாருதி கிராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா ஹைரைடர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    Next Story
    ×