search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    130 கிமீ ரேன்ஜ் வழங்கும் பியூர் EV எலெக்ட்ரிக் பைக் இந்தியாவில் அறிமுகம்
    X

    130 கிமீ ரேன்ஜ் வழங்கும் பியூர் EV எலெக்ட்ரிக் பைக் இந்தியாவில் அறிமுகம்

    • பியூர் EV நிறுவனத்தின் புது எலெக்ட்ரிக் பைக் வினியோகம் மார்ச் மாத வாக்கில் துவங்க இருக்கிறது.
    • புது பியூர் EV எலெக்ட்ரிக் பைக்கில் 3.0 கிலோவாட் ஹவர் AIS சான்று பெற்ற பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஐதராபாத்தை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளரான பியூர் EV இந்திய சந்தையில் இகோட்ரிஃப்ட் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய பியூர் EV இகோட்ரிஃப்ட் மாடலின் விலை ரூ. 99 ஆயிரத்து 999, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை டெல்லியை சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

    மற்ற மாநில வாடிக்கையாளர்களுக்கு இகோட்ரிஃப்ட் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளின் விலை ரூ. 1 லட்சத்து 14 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புது பியூர் EV எலெக்ட்ரிக் பைக் வினியோகம் மார்ச் 1 ஆம் தேதி துவங்குகிறது. பியூர் EV இகோட்ரிஃப்ட் மாடலில் 3.0 கிலோவாட் ஹவர் AIS 156 சான்று பெற்ற பேட்டரி உள்ளது.

    இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 130 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது. பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய ஆறு மணி நேரம் ஆகும். 20 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய மூன்று மணி நேரம் ஆகும். புதிய இகோட்ரிஃப்ட்- டிரைவ், கிராஸ் ஒவர் மற்றும் த்ரில் என மூன்று வித ரைடிங் மோட்களை கொண்டிருக்கிறது.

    இதில் உள்ள டிரைவ் மோட் மணிக்கு 45 கிலோமீட்டர் வேகத்தில் மட்டும் செல்லும். கிராஸ் ஒவர் மோடில் மணிக்கு அதிகபட்சம் 60 கிலோமீட்டர் வேகத்திலும், த்ரில் மோட் மணிக்கு அதிகபட்சம் 75 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. இதன் எலெக்ட்ரிக் மோட்டார் 4.2 ஹெச்பி பவர் பவர் வெளிப்படுத்துகிறது.

    Next Story
    ×