search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    நா ரெடி.. ரோல்ஸ் ராய்ஸ்-க்கு போட்டியை ஏற்படுத்தும் டொயோட்டா செஞ்சுரி எஸ்யுவி!
    X

    நா ரெடி.. ரோல்ஸ் ராய்ஸ்-க்கு போட்டியை ஏற்படுத்தும் டொயோட்டா செஞ்சுரி எஸ்யுவி!

    • டொயோட்டா நிறுவனம் செஞ்சுரி பிரான்டு லிமோசின்களை மட்டுமே விற்பனை செய்து வருகிறது.
    • டொயோட்டா நிறுவனம் செஞ்சுரி பிரான்டிங்கில் எஸ்யுவி மாடலை உருவாக்கி வருவதாக தகவல்.

    டொயோட்டா நிறுவனம் பல்வேறு விலை பிரிவுகளில், ஏராளமான மாடல்களை விற்பனை செய்து முன்னணி நிறுவனமாக விளங்கி வருகிறது. அந்த வகையில் வழக்கமான டொயோட்டா பிரான்டு, லெக்சஸ் பிரீமியம் பிரான்டு, சீன மற்றும் வட அமெரிக்க சந்தைக்கென முற்றிலும் புதிய கிரவுன் பிரான்டு என டொயோட்டா நிறுவனம் உலகம் முழுக்க பல்வேறு பிரான்டிங்கில் பலதரப்பட்ட வாகனங்களை விற்பனை செய்து வருகிறது.

    எனினும், அல்ட்ரா டாப் என்ட் வாகனங்கள் பிரிவில் டொயோட்டா நிறுவனம் செஞ்சுரி பிரான்டு லிமோசின்களை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. தற்போது வரை செஞ்சுரி பிரான்டு ஜப்பானின் உள்நாட்டு சந்தையில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    மேலும் இந்த பிரான்டில் ஒரே மாடல் மட்டுமே உள்ளது. தற்போது ஆட்டோமொபைல் சந்தையில் எஸ்யுவி மாடல்கள் முன்னணியில் இருப்பதை தொடர்ந்து, டொயோட்டா நிறுவனம் செஞ்சுரி பிரான்டிங்கில் எஸ்யுவி மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய டொயோட்டா செஞ்சுரி எஸ்யுவி மாடல் ரோல்ஸ் ராய்ஸ் கலினன் மற்றும் பென்ட்லி பென்ட்யகா மாடல்களுக்கு போட்டியாக அமையும்.

    செஞ்சுரி மாடலின் இன்டீரியர்கள் மிகவும் விசேஷமாக உருவாக்கப்பட்டு வருகின்றன. இவை ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் பென்ட்லி வாகனங்களுக்கு சற்றும் குறைவில்லாத ஆடம்பர சவுகரிய அனுபவத்தை வழங்கி வருகின்றன. இதன் காரணமாகவே டொயோட்டா செஞ்சுரி மாடல் ஜப்பான் மன்னர், அரச குடும்பத்தை சார்ந்தவர்கள், வியாபாரிகள் உள்ளிட்டோரை வாடிக்கையாளர்களாக கொண்டிருக்கிறது.

    முதல் முறையாக டொயோட்டா நிறுவனம் செஞ்சுரி பிரான்டு எஸ்யுவி மாடலை உருவாக்குகிறது. மேலும் முதல் முறையாக செஞ்சுரி மாடல் ஜப்பான் மட்டுமின்றி, பல்வேறு உலக நாடுகளிலும் விற்பனைக்கு வர இருக்கிறது. டொயோட்டா செஞ்சுரி மாடல் வட அமெரிக்க ஹைலேன்டர் மோனோக் எஸ்யுவி வடிவில் உருவாக்கப்படுகிறது.

    அதன்படி இந்த எஸ்யுவி எப்படி காட்சியளிக்கும் என்பதை விளக்கும் ரென்டர்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த கார் தோற்றத்தில் 3-பாக்ஸ் டிசைன் கொண்டிருக்கிறது. புதிய செஞ்சுரி எஸ்யுவி மாடல் ரோல்ஸ் ராய்ஸ் கலினனை விட சிறப்பான ஆடம்பர எஸ்யுவி-ஆக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கும் என்று தெரிகிறது.

    புதிய டொயோட்டா செஞ்சுரி எஸ்யுவி மாடலில் 5.0 லிட்டர் ஹைப்ரிட் வி8 என்ஜின் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இது அதிகபட்சமாக 425 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கலாம். 3-rd Gen டொயோட்டா செஞ்சுரி செடான் மாடலிலும் இதே என்ஜின் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    Photo Courtesy: CarScoops

    Next Story
    ×