என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா (Cinema)
X
கபாலியில் ரித்விகாவின் ரகசியம் காக்கும் படக்குழு
Byமாலை மலர்15 Jun 2016 4:14 PM IST (Updated: 15 Jun 2016 4:14 PM IST)
கபாலி படத்தில் ரித்திகா கதாபாத்திரத்தை மட்டும் படக்குழுவினர் மிகவும் ரகசியமாக பாதுகாத்து வருகிறார்களாம்.
ரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கபாலி’ படம் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், இப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் தற்போது படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இப்படத்தில் ராதிகா ஆப்தே, கலையரசன், நாசர், கிஷோர், தினேஷ், தன்ஷிகா உள்ளிட்டோர் நடித்துள்ளார். ‘கபாலி’ படத்துக்காக இதுவரை வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்களில் இவர்கள் அனைவரும் படங்களும் இடம்பெற்றுள்ளன. ஆனால், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரித்விகாவின் படத்தை மட்டும் படக்குழு இன்னமும் வெளியிடவில்லை.
இதுகுறித்து விசாரிக்கும்போது, ‘கபாலி’ படத்தில் ரஜினிக்கு பிறகு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பது ரித்விகாதானாம். அதனால், அவரது புகைப்படங்களை வெளியிடாமல் வைத்திருக்கிறார்களாம். படத்தை பார்க்கும்போது அவருடைய கதாபாத்திரம் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தும் என்று நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.
‘கபாலி’ படத்தில் ரித்விகாவின் நடிப்பை பார்த்து ஒருமுறை ரஜினியே ஆச்சர்யப்பட்டாராம். அந்த அளவுக்கு அவருடைய கதாபாத்திரம் இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்ப படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தணிக்கை முடிந்தபிறகு படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Next Story
×