search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    ரஜினி பேரை சொன்னதும் தலை சுற்றியது - சாக்‌ஷி அகர்வால்
    X

    ரஜினி பேரை சொன்னதும் தலை சுற்றியது - சாக்‌ஷி அகர்வால்

    ரஜினியின் காலா படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சாக்ஷி அகர்வால், தனக்கு முதலில் ரஜினி படம் என்று தெரியாது, தலைவர் பெயரை சொன்னதும் தலை சுற்றிவிட்டதாக கூறினார். #Kaala #Rajinikanth
    பார்ப்பதற்கு இந்தி நடிகைகள் போல இருக்கிறார் சாக்‌ஷி. ஆனால் வாயை திறந்தால் தமிழ் சரளமாக வருகிறது. காலா படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவங்களை மாலைமலருக்காக பகிர்ந்துகொண்டார்.

    பிறந்தது இமாச்சல பிரதேசத்தில். வளர்ந்தது சென்னை. படித்தது அண்ணா பல்கலைகழகம். தங்க பதக்க மாணவி. பின்னர் மாடலிங், ஃபே‌ஷன் ஷோ, விளம்பரங்கள் அப்படியே சினிமா நுழைவு.

    காலா படம்னு சொல்லாம ஒரு படத்துக்கான தேர்வுனு தான் கூப்பிட்டாங்க. ரஞ்சித்தின் உதவி இயக்குநர்னு பேசினப்ப யாரோ விளையாடறாங்கன்னு தான் நினைச்சேன். தேர்வு நடந்தபோது கூட இது ரஜினி படம் என்று சொல்லவில்லை. தேர்வில் என்னை பார்த்த உடனேயே இயக்குநர் ரஞ்சித் ‘இந்த பொண்ணு கதாநாயகியாத் தான் நடிப்பேன்னு சொன்னா என்ன செய்வது... அதனால வேண்டாம் என்று சொல்லிட்டார். அப்புறம் எந்த வேடமா இருந்தாலும் நடிக்க தயார்னு சொன்னபிறகு சரி சொன்னார். அவர் என்னை தேர்ந்தெடுத்த பிறகு தான் மெதுவா ‘யார் சார் ஹீரோ?’னு கேட்டேன். ரஜினி சார்னு சொன்னார். எனக்கு தலையே சுத்திவிட்டது. என்னது தலைவர் கூடவே நடிக்க போறோமான்னு என்னால நம்பவே முடியலை. அப்புறம் 21 நாட்கள் நடிக்க பயிற்சி கொடுத்து தான் படப்பிடிப்புக்கு வர சொன்னார்கள். ரஜினி சார் தவிர எல்லோருமே பயிற்சில கலந்துகொண்டார்கள்.



    படத்துக்கான போட்டோஷூட் நடந்தப்ப தான் முதல் தடவையா பார்த்தேன். கூடவே இருந்தாலும் ரொம்ப சந்தோ‌ஷமா இருந்ததால பேச முடியலை. மும்பை படப்பிடிப்பில் தான் அவருக்கு அறிமுகம் ஆனேன். என்னை பார்த்ததும் ‘நீங்க மும்பையா?’னு கேட்டார். ‘அய்யோ இல்லை சார். நான் பக்கா சென்னை பொண்ணு’ன்னு சொன்னேன். அப்புறம் என்னை பற்றி விசாரித்து தெரிந்துகொண்டார். அவர்கூட வசனம் பேசற காட்சியில் பதற்றமாவே இருந்தேன். இயக்குநர் ஒத்திகைக்கு கூப்பிட்டார். ஒத்திகைக்கு ரஜினி வரமாட்டார்னு நினைச்சா அவரும் அங்கேயே இருக்கார். நான் பதற்றமாவே வசனம் பேசி முடிச்சேன். ரஜினி சார் ‘என்ன ரஞ்சித் இந்த பொண்ணு பார்க்க வட இந்திய பொண்ணு மாதிரி இருக்கு. ஆனா இவ்வளவு நல்லா தமிழ் பேசுது’ன்னு சொன்னார். அப்பதான் எனக்கு உயிரே வந்தது.

    ஒரு சாதாரண பெண்ணா தான் இருப்பேன். அவர்களும் என்னை அப்படி தான் பார்ப்பார்கள். இப்பகூட வீட்டில் ஏதும் வேலை இருந்தால் நானே செய்வேன். பழகிப் பாருங்கள். பக்கத்து வீட்டு பொண்ணு மாதிரி எளிமையா இருப்பேன். கடின உழைப்பாளி. மனதில் பட்டதை பட்டுஞ்னு பேசிவிடுவேன் என்றார். #Kaala #Rajinikanth #SakshiAgarwal

    Next Story
    ×