search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    பொய்யான வீடியோவால் அவதிப்பட்டேன் - லக்ஷ்மி மேனன் வருத்தம்
    X

    பொய்யான வீடியோவால் அவதிப்பட்டேன் - லக்ஷ்மி மேனன் வருத்தம்

    ஒருமுறை தன்னைப் பற்றிய ஒரு பொய்யான வீடியோ பரவிய போது தான் அந்தப் பிரச்சினையில் இருந்து மீண்டு வர கஷ்டப்பட்டதாக கூறினார். #LakshmiMenon
    லட்சுமி மேனன் சினிமாவில் தனக்கு விழுந்த இடைவெளி பற்றி அளித்துள்ள பேட்டி:

    என்ன டான்ஸ் பக்கம் சென்று விட்டீர்கள்?

    டான்ஸ் என்றால் எனக்கு உயிர் என்று கூட சொல்லலாம். ஏன்னா, மூன்று வயதில் இருந்து நான் டான்ஸ் கற்றுக்கொண்டு இருக்கிறேன். கிடைத்துள்ள இந்த இடைவெளியில் குச்சுப்புடி நடனத்தில் டிப்ளாமோ படித்து வருகிறேன். கூடவே, சோசியாலஜி டிகிரியை தனியாரில் படித்து வருகிறேன். ஏற்கனவே பரத நாட்டியத்துக்கு ஒரு கோர்ஸ் படித்தேன். குச்சுப்புடி டான்சில் எனக்கு இது 2-வது கோர்ஸ்.

    அடுத்து?

    `யங் மங் சங்’ படம் முடிஞ்சு ரொம்பநாள் ஆகிவிட்டது. அதனால், சீக்கிரமே ரிலீசாகும் என்று நினைக்கிறேன். அடுத்து, 2 தமிழ்ப் படத்துல நடிக்க கதை கேட்டு வைத்துள்ளேன். முடிவானதும் சொல்கிறேன்.



    இந்த இடைவெளி உங்கள் மனதை பாதித்ததா?

    நான் எங்கே இருந்தாலும், எப்படி இருந்தாலும் மகிழ்ச்சியாகதான் இருப்பேன். எனக்குக் கிடைத்துள்ள இந்த இடைவெளியை சந்தோ‌ஷமாக கழிக்கிறேன். வாழ்க்கை என்ன கொடுக்குதோ, அதை அப்படியே ஏற்றுக்கொள்கிற மனநிலை எனக்கு இருக்கு. ஏற்ற இறக்கங்கள் கொண்டதுதானே வாழ்க்கை... அது எனக்குப் புரியும்.

    ரசிகர்கள் ஆதரவு?

    ஒருமுறை என்னைப் பற்றிய ஒரு பொய்யான வீடியோ பரவியது. அது பொய் என்று எல்லோருக்கும் தெரிந்து, எனக்கு ஆதரவாக எல்லோரும் பேசினாலும், அந்தப் பிரச்சினையில் இருந்து மீண்டு வர எனக்கு சில வாரங்கள் தேவைப்பட்டது. அந்த சமயத்துல என்னால நார்மலா இருக்க முடியல. மனதளவில் ரொம்ப அவதிப்பட்டேன். அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்துட்டேன். இப்போது, நான் என் வேலைகளில் கவனமா இருக்கேன். அவரை மாதிரி இருக்கணும், இவரை மாதிரி இருக்கணும்னு நினைக்கும்போது தான் பிரச்சினை வரும். இதுவும் வாழ்க்கையின் ஒரு பகுதிதான். அதனால், பிரேக், பிரச்சினைகள்... எதையும் நான் பெருசா எடுத்துக்கமாட்டேன். எப்போவும் சந்தோ‌ஷமா இருக்கணும், நம்மளைச் சுத்தி இருக்கிறவங்களையும் சந்தோ‌ஷமா வெச்சுக்கணும்... அவ்ளோதான். என்றார். #LakshmiMenon #YangMangChang

    Next Story
    ×