search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    3 ஆண்டுகள், 23 அறுவை சிகிச்சைகள்.. அந்த வெறி இல்லனா உங்க முன்னாடி நான் இல்ல - விக்ரம்
    X

    3 ஆண்டுகள், 23 அறுவை சிகிச்சைகள்.. அந்த வெறி இல்லனா உங்க முன்னாடி நான் இல்ல - விக்ரம்

    • திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
    • படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைப்பெற்றது.

    இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் "தங்கலான்." மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள தங்கலான் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து, தற்பொழுது ரிலீஸுக்கு தயாராகியுள்ளது.

    இந்த நிலையில், தங்கலான் படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரிலீசாக இருக்கிறது.

    திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது. சமீபத்தில் வெளியான படத்தின் டிரைலரும் படத்தின் பாடலான மேனா மினிக்கி மற்றும் தங்கலான் வார் சாங் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைப்பெற்றது. விழாவில் பிரபலங்கள், இயக்குனர்கள், நடிகர் சிவகுமார், படக்குழு மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.

    அதில் விக்ரம் பேசியது

    படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் குழுவினருக்கு நன்றி தெரிவித்தார். அவருடைய ஒப்பனை கலைஞனான டாமிற்கு நன்றி தெரிவித்தார். தங்கலான் படத்தில் நடித்த சக நடிகர்களுக்கும், இசையமைப்பாளர்களுக்கும், இயக்குனருக்கும் நன்றி தெரிவித்தார். தங்கலான் படத்தில் ஒப்புக்கொண்டதற்கு காரணம் அவருக்கும் , தங்கலான் கதாப்பாத்திரத்திற்கும் ஒற்றுமை இருக்கிறது. அந்த கதாபாத்திரத்தை என்னால் உணர முடிந்தது. என கூறினார்.

    அப்பொழுது அவரது வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை பற்றி பகிர்ந்துக் கொண்டார் " எனக்கு நடிப்பில் மிகப் பெரிய ஆர்வம் இருந்தது. சின்னதோ பெரிதோ எதோ ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என வெறி இருந்தது . ஆனால் கல்லூரி படிக்கும் போது ஒரு நாள் விபத்தில் சிக்கிக் கொண்டேன், என்னுடைய கால் உடைந்தது.

    அதற்கு பிறகு 3 வருடங்கள் என்னுடைய வாழ்கையை மருத்துவமனையில் கடத்தினேன். 23 அறுவை சிகிச்சை நடந்தது . மருத்துவர்கள் என்னால் எழுந்து நடக்கவே முடியாது என்று சொன்னார்கள். ஆனால் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் , கனவும் லட்சியம் மட்டும் எனக்கு இருந்தது. ஏதோ ஒரு வாய்ப்பு கிடைத்தால் சின்ன கதாப்பாத்திரத்தில் நடித்திட மாட்டோமா என்று ஏங்கினேன். இந்த போராட்டத்திலேயே 10 வருடங்கள் கழிந்தது. நடக்கவே முடியாது என்ற சொன்னவர்கள் முன் என்னால் நடக்க முடிந்தது. அனைவரும் நடிப்பு வரவில்லை இந்த துறையை விட்டு வேறு வேலை பாரு என்று சொன்னார்கள். ஆனால் என்னை நானே தேர்த்திக் கொண்டு படங்களில் நடித்தேன். அன்று நான் விட்டு இருந்தால் இன்று உங்கள் முன் நின்று பேசி இருக்க முடியாது.

    சரி சினிமாவில் இன்றும் வெற்றி பெறாமல் இருந்தால் என்ன செய்வாய் என்று கேட்டால், இன்றும் நான் சினிமாவிற்காக முயற்சி செய்துக் கொண்டே இருப்பேன்." என்று கூறினார். இந்த பதிலுக்கு அரங்கமே அதிர்ந்தது.

    தங்கலான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமையும் என ரசிகர்களிடம் எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×