என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
தேகத்தின் சுருக்கங்கள் எல்லாம் சிரிக்கின்றதே - ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த நடிகை ரேவதியின் இன்ஸ்டா பிக்
- 2002 ஆண்டு மிதிர் மை ஃப்ரண்ட் என்ற ஆங்கில் திரைப்படத்தை இயக்கினார்.
- ரேவதி தற்பொழுது மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார்.
1980-1990 காலக்கட்டங்களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ரேவதி. 1983 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான மண் வாசனை திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார். நடித்த முதல் திரைப்படமே மிகப் பெரியளவில் வெற்றிப் பெற்றது. இப்படத்திற்கு சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார்.
அதே ஆண்டில் கட்டத்தே கிளிக்கூடு என்ற மலையாள திரைப்படத்தில் நடித்து மலையாள திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகினார். இப்படமும் மிகப்பெரியளவில் ஹிட்டானது. அதைத் தொடர்ந்து தமிழ், மலையாள, தெலுங்கு. இந்தி திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார்.
தான் நடிக்கும் ஒவ்வொரு கதாப்பாத்திரத்தையும் மிகவும் தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவர். 1986 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான மௌன ராகம் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அதை தொடர்ந்து புன்னகை மன்னன், கிழக்கு வாசல், தேவர் மகன், மறுபடியும், அஞ்சலி, மகளிர் மட்டும் என பல தொடர் வெற்றிப்படங்களில் நடித்தார்.
அதற்கு பின் இயக்கத்தில் கால் பதித்தார். 2002 ஆண்டு மிதிர் மை ஃப்ரண்ட் என்ற ஆங்கில் திரைப்படத்தை இயக்கினார். இப்படம் சிறந்த ஆங்கில திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்றது. அதை தொடர்ந்து ஃபிர் மிலேங்கே என்ற இந்தி திரைப்படத்தை இயக்கினார். கேரளா கஃபே என்ற மலையாள ஆந்தாலஜி திரைப்படத்தில் ஒரு கதையை இயக்கினார். அதைத்தொடர்ந்து சலாம் வெங்கி என்ற இந்தி திரைப்படத்தை இயக்கினார்.
அதைத்தொடர்ந்து பல தமிழ் மற்றும் மலையாள தொலைக்காட்சி தொடரில் நடித்தார். பின் நீண்ட இடைவேளைக்கு பின் 2017 ஆம் ஆண்டு தனுஷ் இயக்கத்தில் பவர் பாண்டி திரைப்படத்தில் நடித்து மக்கள் மனதை வென்றார். 2019 ஆம் ஆண்டு வெளியான வைரஸ் என்ற மலையாள திரைப்படத்தில் நடித்தார்.
இந்நிலையில் தற்பொழுது மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ஒரு வெப் சீரிஸ் ஒன்றை இயக்கி வருகிறார். சித்தார்த் ராமசாமி இந்த சீரிஸில் இணை இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார்.
இச்சூழலில் நடிகை ரேவதி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அப்புகைப்படம் ஷூட்டிங் தளத்தில் ஒளிப்பதிவாளர் சித்தார்த்தால் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகும். அதற்கு நன்றி தெரிவித்து அந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இப்புகைப்படம் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்