search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    இந்த வாரம் ஓடிடி-யில் வெளியாகும் அசத்தலான படங்கள்
    X

    இந்த வாரம் ஓடிடி-யில் வெளியாகும் அசத்தலான படங்கள்

    • 'இடி மின்னல் காதல்' திரைப்படம். வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
    • ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் மற்றும் ஐஷ்வர்யா ராஜேஷ் இணைந்து ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியாகியது டியர் திரைப்படம்.

    ஏப்ரல் 5 ஆம் தேதி பரசுராம் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் மிருணாள் தாகூர் இணைந்து நடித்து வெளியான திரைப்படம் "தி ஃபேமிலி ஸ்டார்". இத்திரைப்படம் தற்பொழுது ஓடிடி தளமான அமேசான் பிரைமில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியிடப்பட்டுள்ளது.

    மார்ச் 29 ஆம் தேதி மாலிக் ராம் இயக்கத்தில் சித்து ஜொனலகட்டா மற்றும் அனுபமா பரமேஸ்வரன் இணைந்து நடித்து வெளியாகியது 'டில்லு ஸ்கொயர்' திரைப்படம். படம் வெளியாகி மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. படத்தின் முதல் பாகத்தை போலவே இத்திரைப்படமும் வெற்றியடைந்தது. படம் இதுவரை 120 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி நெட்ஃப்லிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

    பாஸ்கல் வெடிமுத்து இயக்கத்தில் திரவ் , எம்.எஸ் பாஸ்கர் மற்றும் இஸ்மத் பானு நடிப்பில் கடந்த மார்ச் 29 ஆம் தேதி வெளியான் திரைப்படம் 'வெப்பம் குளிர் மழை'. கிராமத்து பின்னணியில் ஒரு குழந்தையின்மை தம்பதிகள் படும் கஷ்டத்தை கூறும் கதையாக அமைந்திருக்கும் இத்திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

    பாலாஜி மாதவன் இயக்கத்தில் சிபி, பாவ்யா, யாஸ்மின் பொன்னப்பா, ராதா ரவி மற்றும் பாலாஜி சக்திவேல் நடிப்பில் கடந்த மார்ச் 29 ஆம் தேதி வெளியாகியது 'இடி மின்னல் காதல்' திரைப்படம். வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

    ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் மற்றும் ஐஷ்வர்யா ராஜேஷ் இணைந்து ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியாகியது டியர் திரைப்படம். குறட்டை விடும் மனைவியும் அதனால் கஷ்டப்படும் கணவனின் பற்றிய கதையாகும். வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×