என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
அடுத்த தளபதி நீங்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த சிவகார்த்திகேயன்
- மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை கதையான அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.
- ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்கியுள்ளார்.
மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை கதையான அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்கியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன், மகேந்திரன் தயாரித்துள்ளனர். திரைப்படம் வரும் 31 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படக்குழு ப்ரோமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். நேற்று கேரளாவில் உள்ள கொச்சியில் படத்தின் ப்ரோமோஷனல் ஈவண்ட் நடைப்பெற்றது.
அப்பொழுது சிவகார்த்திகேயன் அளித்துள்ள பேட்டியில், அமரன் படத்தின் கதையை என்னிடம் சொன்னதும் பிடித்தது. உடனே நடிக்க சம்மதித்தேன். இந்த படத்தின் கதையை கேட்டதுமே ஜெயில் சூப்பிரண்டாக இருந்த எனது தந்தையின் நினைவு வந்தது. அவரது உழைப்பு இந்த கதாபாத்திரத்தோடு என்னை இணைத்துக் கொள்ள செய்தது. காஷ்மீரில் முகுந்த் வரதராஜன் வேலை செய்த இடங்களில் படப்பிடிப்பு நடந்தது. ராணுவ அதிகாரிகள் எங்களுக்கு பாதுகாப்பு அளித்தனர்.
அதைத்தொடர்ந்து விஜய் இடத்துக்கு நான் வருவதாக சொல்வது தவறானது. யாருடைய இடத்தையும் யாரும் பிடிக்க முடியாது. இவ்வளவு பெரிய இடத்தை விட்டு விட்டு அவர் அரசியலுக்கு செல்கிறார் என்றால் அவரது இலக்கு வேறு. அவர் வேறு இடத்துக்கு சென்றாலும் அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அவரது இடம் அப்படியேதான் இருக்கும். தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறேன். கூலி படத்தில் ரஜினியுடன் நான் நடிக்கிறேன் என்ற தகவல்கள் பரவுகிறது. இதுவரை அப்படி ஒரு விஷயம் நடக்கவில்லை என்றார்.
அமரன் திரைப்படத்தின் மீது மக்களுக்கு பெரிய எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது. படத்திற்கான முன்பதிவுகள் சில திரையரங்குகளில் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே புக் மை ஷோ-வில் மட்டும் 1 லட்ச டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
https://iflicks.in/
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்