search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    போதைப் பொருள் பார்சலில் வந்துள்ளது என்று மிரட்டி பிக்பாஸ் நடிகையிடம் ரூ.17½ லட்சம் பறித்த மோசடி கும்பல்
    X

    போதைப் பொருள் பார்சலில் வந்துள்ளது என்று மிரட்டி 'பிக்பாஸ்' நடிகையிடம் ரூ.17½ லட்சம் பறித்த மோசடி கும்பல்

    • தனிப்படை போலீசார் வியூகங்கள் அமைத்து மோசடி கும்பலை தேடி வருகிறார்கள்.
    • ‘ஆன்லைன்' மோசடி பற்றி மத்திய அரசும், போலீசாரும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் சின்னத்திரை நடிகை சவுந்தர்யாவும் போட்டியாளர்களில் ஒருவராக உள்ளார். இவர், 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்பு 'ஆன்லைன்' மோசடி கும்பலிடம் சிக்கி ரூ.17 லட்சத்து 57 ஆயிரம் பணத்தை பறிகொடுத்துள்ளார். இந்த தகவலை அவர், அந்த நிகழ்ச்சியில் வெளிப்படுத்தினார்.

    ஆனால் அவர், சொல்வது உண்மையா? என்ற விமர்சனங்கள் எழுந்தது. இதையடுத்து, சவுந்தர்யா கடந்த செப்டம்பர் மாதம் 10-ந்தேதி அன்று அளித்த புகாரின் பேரில் சூளைமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்த நகலை அவரது குடும்பத்தினர் இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.



    சவுந்தர்யாவிடம், 'மும்பையில் இருந்து சி.பி.ஐ. அதிகாரிகள் பேசுகிறோம். உங்கள் பெயரில் போதைப்பொருள் பார்சல் வந்துள்ளது. கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க பணம் அனுப்புமாறு மிரட்டி 12 பண பரிவர்த்தனைகள் மூலம் இந்த பணத்தை மோசடி கும்பல் பறித்துள்ளது.

    இந்த மோசடி குறித்து, சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில், 'சவுந்தர்யா அனுப்பிய பணம் மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், மும்பை, அசாம், மைசூரு, போபால் உள்பட இடங்களில் உள்ள 9 வங்கி கணக்குகளுக்கு சென்றிருப்பது தெரிய வந்துள்ளது. தனிப்படை போலீசார் வியூகங்கள் அமைத்து இந்த மோசடி கும்பலை தேடி வருகிறார்கள்.

    'ஆன்லைன்' மோசடி பற்றி மத்திய அரசும், போலீசாரும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். எனினும் இந்த மோசடி சம்பவங்கள் தொடர் கதையாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×