என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
நீ என்ன அவ்ளோ பெரிய சம்பவக்காரனா? - வீர தீர சூரன் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ
- இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் தனது 62 - வது படமான 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.
- இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
சேதுபதி, சித்தா படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் தனது 62 - வது படமான 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷரா விஜயன், சித்திக் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தை எச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார். ஜி. வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
இப்படத்தில் விக்ரம் கிராமிய தோற்றத்தில் காளி என்ற கேங்ஸ்டராக நடிக்கிறார். படத்தின் டைட்டில் டீசர் மற்றும் போஸ்டர்கள் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்கள் கவனத்தை பெற்றது.
படத்தின் எஸ்.ஜே சூர்யா காவல் அதிகாரியாக நடித்துள்ளார். படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மதுரை கடந்த மாதம் முடிவடைந்தது. இதை கொண்டாடும் வகையில் படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடினர். இப்படத்தை குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு உருவாகி வருகிறது.
இந்நிலையில் வீர தீர சூரன் திரைப்படத்தின் புதிய கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவின் மூலம் தமிழ்நாட்டின் விநியோகிஸ்த உரிமையை 5 ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
The Tamilnadu theatrical rights for our prestigious movie #VeeraDheeraSooran have been acquired by @FivestarSenthil ! Get ready for a thrilling cinematic experience coming soon to theaters near you ?@chiyaan #Kaali #காளி#VeeraDheeraSooranAn #SUArunkumar PictureA… pic.twitter.com/yWst065LzA
— HR Pictures (@hr_pictures) October 28, 2024
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.