search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    வேட்டையன் படத்திற்கு தடை விதிக்க முடியாது- ஐகோர்ட் அதிரடி
    X

    வேட்டையன் படத்திற்கு தடை விதிக்க முடியாது- ஐகோர்ட் அதிரடி

    • படத்தில் இடம்பெற்றுள்ள என்கவுன்ட்டர் தொடர்பான வசனங்களை நீக்கவோ அல்லது MUTE செய்ய வேண்டும்.
    • லைகா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு.

    இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள படம் வேட்டையன். இந்த படத்தில் அமிதாப் பச்சன், ஸ்ருதி ஹாசன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி, ரோகிணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    இந்தப் படம் வருகிற அக்டோபர் 10 ஆம் தேதி ஆயுத பூஜையை ஒட்டி திரையரங்குகளில் வெளியாக உள்ள, இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியானது.

    இந்த நிலையில், 'வேட்டையன்' படத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடரப்பட்டது. படத்தில் இடம்பெற்றுள்ள என்கவுன்ட்டர் தொடர்பான வசனங்களை நீக்கவோ அல்லது MUTE செய்ய வேண்டும். அதுவரை இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று மதுரை சேர்ந்த பழனிவேலு என்பவர் வழக்கு தொடர்ந்தார்.



    இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, என்கவுன்ட்டரை ஆதரிப்பது போல வேட்டையன் படத்தில் காட்சிகளும், வசனங்களும் வருகின்றன. எனவே படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் வாதிட்ப்பட்டது.

    இதையடுத்து நீதிபதிகள், மனு குறித்து தமிழ்நாடு அரசு, மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம், லைகா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும் படத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று தெரிவித்து விசாரணையை ஒத்தி வைத்தனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×