search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    `ரஜினி சாரோட என்னைக்கும் போட்டிப்போட நெனச்சது கிடையாது - கங்குவா தயாரிப்பாளர்
    X

    `ரஜினி சாரோட என்னைக்கும் போட்டிப்போட நெனச்சது கிடையாது' - கங்குவா தயாரிப்பாளர்

    • 3D தொழில் நுட்பத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது.
    • தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்கிறார்.

    சிறுத்தை சிவா தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் கடைசியாக ரஜினி நடிப்பில் அண்ணாத்த திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதை தொடர்ந்து சூர்யா நடிப்பில் கங்குவா திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    இவர் பீரியாடிக் திரைப்படமாக இந்த படத்தை இயக்கியுள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்கிறார். திரைப்படம் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன் பெரும் பொருட் செலவில் தயாரித்துள்ளது. இதன் உரிமையாளரான ஞானவேல்ராஜா சமீபத்தில் நடந்த நேர்காணலில் கங்குவா படத்தின் பல அப்டேட்களை கூறியுள்ளார்.

    அதில் அவர்

    " எனக்கு 60- 70 சதவீத பணத்தை படத்தின் தயாரிப்பு செலவுகளில் நான் செலவளிப்பேன், 30-40 சதவீத பணத்தை நடிகர்களின் சம்பளத்தில் செலவளிப்பேன், இப்படித் தான் என்னுடைய படங்களை தயாரித்து வருகிறேன். இவ்வாறு தயாரித்தால் தான் படத்தின் தரம் உயரும் " என்று கூறினார்.

    கங்குவா திரைப்படம் ரஜினியின் வேட்டையன் படத்தோடு போட்டியிடப்போகிறது குறித்த கேள்விக்கு " கங்குவா திரைப்படம் முதலில் அக்டோபர் 10 தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய ப்ளான் செய்யப்பட்டது. ஆனால் அப்பொழுது எந்த திரைப்படமும் வெளியாகப் போவதாக பதிவு செய்யவில்லை, மனதளவும் சரி, தொழில் ரீதியாகவும் சரி நான் என்றும் ரஜினி சாருடன் போட்டியிட வேண்டும் என நினைத்ததே இல்லை. நான் என்னோட பிறந்தநாள் அன்றுக் கூட கோவிலுக்கு சென்று பிராத்தனை செய்தது கிடையாது. ஆனால் ஒவ்வொரு ரஜினி சாரோட பிறந்தநாளுக்கு ஆஞ்சனேயர் கோவிலில் 108 தடவை சுற்றி வருவேன். அந்தளவுக்கு நான் ரஜினி சாருக்கு எனக்கு மரியாதை இருக்கிறது. இதனால் நான் என்றும் எப்பொழுதும் போட்டி போட நினைத்ததே இல்லை." என்று கூறியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×