என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
உங்களுடன் பணியாற்றும் வாய்ப்பை மிஸ் பண்ணிட்டேன் ஆனா.. - வெட்கத்தை விட்டு சொன்ன சூர்யா
- 'கங்குவா' திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
- படத்தின் 3டி டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைப்பெற்றது
ஸ்டுடியோ க்ரீன், ஞானவேல்ராஜா தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, திஷா பதானி உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் 'கங்குவா' திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் 3டி டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைப்பெற்றது அதை தொடர்ந்து ஐதரபாத்தில் படக்குழு ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் ராஜமௌலி கலந்துக்கொண்டு படக்குழுவை வாழ்த்தினார். அப்பொழுது விழாவில் சூர்யா பேசியதாவது " குடும்பத்தில் மூத்தவன் நன்றாக இருந்தால் மொத்த குடும்பமே செல்வ செழிப்போடு இருக்கும் அதுப்போல நீங்கள் மொத்த திரைத்துறை குடும்பத்துக்கும் வழிக்காட்டியுள்ளீர்கள். உங்களுடன் என்னுடைய பயணம் நீண்ட வருடங்களுக்கு முன் தொடங்கியது. வெக்கத்தை விட்டு சொல்கிறேன் உங்களுடன் பணியாற்றும் வாய்ப்பை இழந்துள்ளேன். வாய்ப்பை எந்த இடத்தில் விட்டேனோ அதே இடத்தில்தான் இன்னும் நான் நின்று கொண்டு இருக்கிறேன். ஒரு நாள் மீண்டும் அந்த வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன்." என கூறினார்.
அதற்கு பதிலளிக்கும் விதமாக ராஜமௌலி " நீங்கள் தான் சூர்யா பான் இந்திய திரைப்படமான பாகுபலி உருவாகுவதற்கு காரணம். ஆம் சூர்யாவும் நானும் ஒரு திரைப்படம் பணியாற்ற இருந்தது ஆனால் அது நடக்கவில்லை. சூர்யா என்னுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை அவர் இழந்ததாக கூறினார். ஆனால் உண்மையில் வாய்ப்பை இழந்தது நான் தான். சூர்யாவின் நடிப்பு திறமை, என அனைத்தும் பிடிக்கும். சூர்யா உங்களுடைய முடிவை நான் மிகவும் மதிக்கிறேன். அன்று நீங்கள் ஒரு கதையாசிரியரை தாண்டி ஒரு நல்ல கதையை தேர்தெடுத்து நடிக்க சென்றீர்கள்" என்று கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்