என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
கங்குவா திரைப்படத்தின் டிரைலர் அப்டேட்
- கங்குவா திரைப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி இந்த படம் வெளியாகிறது.
- இத்திரைப்படம் 38 மொழிகளில் 3டி மற்றும் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் பிரம்மாண்ட பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.
சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் கங்குவா. இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தின் முதல் பாடலான ஃபயர் சாங் கடந்த மாதம் வெளியாகியது. இப்பாடல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தை ஞானவேல்ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படம் 38 மொழிகளில் 3டி மற்றும் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் பிரம்மாண்ட பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. வருகிற அக்டோபர் 10 ஆம் தேதி இந்த படம் வெளியாகிறது.
படத்தின் டிரைலர் குறித்து தற்பொழுது அப்டேட் வெளியாகியுள்ளது. படத்தின் டிரைலர் வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளனர்.
போஸ்டரில் சூர்யா கத்தியை வைத்துக் கொண்டு மண்ணில் ஊன்றிய படி பின்னால் பெரிய இறக்கைகளுடன் காணப்படுகிறார். டிரைலரை பார்க்க ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
The anticipation ends now! The time for glory is arriving ✨Get ready for a celebration like no other ❤️?The grand #KanguvaTrailer is all set to be yours from 12th August#KanguvaFromOct10 ? #Kanguva@Suriya_offl @DishPatani @thedeol @directorsiva @ThisIsDSP #StudioGreen… pic.twitter.com/OJ8eRvIv6X
— Studio Green (@StudioGreen2) August 10, 2024
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.