என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
ஓடிடி தளத்தில் வெளியாகும் மெய்யழகன்... தேதி அறிவிப்பு
- அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
- சில விமர்சனங்களை சந்தித்ததை தொடர்ந்து சில காட்சிகள் கட் செய்யப்பட்டது.
'96' படத்தை இயக்கிய பிரேம்குமார் நீண்ட இளைவெளிக்கு பிறகு 'மெய்யழகன்' படத்தை இயக்கியுள்ளார். இது கார்த்தியின் 27-வது படமாகும். இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.
அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் கடந்த மாதம் 27-ந்தேதி வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று ரூ.40 கோடிக்கு மேல் வசூலித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில், 'மெய்யழகன்' திரைப்படம் வருகிற 27-ந்தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி மொழிகளில் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் திரையரங்குகளில் வெளியான பிறகு சில விமர்சனங்களை சந்தித்ததை தொடர்ந்து சில காட்சிகள் கட் செய்யப்பட்டது.
தற்போது ஓடிடி தளத்தில் கட் செய்யப்படாத காட்சிகளுடன் முழுமையாக படம் வெளியாக உள்ளது.
முன்னதாக இப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வருகிற 25-ந்தேதி வெளியாகும் என்று அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது ௨ நாட்கள் கழித்து ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.