என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
சாதனை மேல் சாதனை படைக்கும் ராயன்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்ட சன் பிக்சர்ஸ்
- படத்தில் தனுஷுக்கு தங்கையாக நடித்து இருந்தார் துஷாரா விஜயன்.
- தனுஷ் நடித்த படங்களிலே ராயன் தான் அதிகம் வசூலித்த படமாகும்.
நடிகர் தனுஷ் அவரது 50 வது திரைப்படமான ராயன் திரைப்படத்தை அவரே இயக்கி அதில் நடித்து இருந்தார். திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தனுஷுடன் துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், எஸ்.ஜே சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தில் தனுஷுக்கு தங்கையாக நடித்து இருந்தார் துஷாரா விஜயன்.
நேற்று படத்தின் திரைக்கதையை லைப்ரரி ஆஃப் தி அகாடெமி ஆஃப் மோஷன் ஆர்ட்ஸ் அண்ட் சைன்ச்- இல் சேர்க்கப்பட்டுள்ளது.
இதுவரை தனுஷ் நடித்து வெளியான படங்களில் முதல் நாள் வசூலில் ராயன் திரைப்படத்திற்கு தான் அதிகம். தனுஷ் நடித்த படங்களிலே ராயன் தான் அதிகம் வசூலித்த படமாகும். 2024 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படங்களில் ராயன் தான் வசூலில் முதல் இடம் பெற்றுள்ளது.
இதற்கெல்லாம் நன்றி தெரிவித்து படத்தின் தயாரிப்பாளரான சன் பிக்சரஸ் மக்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதனால் படக்குழுவினர் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். படம் அதன் இரண்டாம் வாரத்தில் வெற்றிகரமாக காலடி எடுத்து வைத்துள்ளது. மக்களின் ஆதரவு இன்னும் அதிகமாகதான் உள்ளது ராயன் திரைப்படத்திற்கு. ராயன் திரைப்படம் இதுவரை 116 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தணிக்கை குழு சார்பில் ஏ சான்றிதழ் கொடுத்தும் இந்தளவு வசூலித்தது மிகப் பெரிய விஷயமாகும்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.