search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    Shah Rukh Khan -Samanthas - Oo Antava song
    X

    'ஊ சொல்றியா மாமா' பாடலுக்கு நடனமாடிய ஷாருக்கான் - இன்ஸ்டா ஸ்டோரி வைத்த சமந்தா

    • இந்திய திரைப்பட அகாடமி விருது விழாவில் ஷாருக்கான் நடனமாடினார்.
    • இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தா பகிர்ந்துள்ளார்.

    2024 சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் (IIFA) விழா அபு அதாபியில் யாஸ் தீவில் உள்ள எதிஹாட் அரங்கில் நடைபெற்றது. கடந்த செப்டம்பர் 27 அன்று தொடங்கிய இந்த மூன்று நாள் விழா செப்டம்பர் 29 ஆம் தேதி நிறைவடைந்தது.

    இதில், சிறந்த நடிகருக்கான விருதை ஷாருக்கான் வென்றார். அட்லீ இயக்கத்தில் வெளியான 'ஜவான்' படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த விருது விழாவில் பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான் மற்றும் விக்கி கௌஷல் ஆகியோர் இணைந்து சமந்தாவின் ஊ சொல்றியா மாமா (தெலுங்கு) பாடலுக்கு நடனமாடினர். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

    இந்நிலையில் இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தா பகிர்ந்துள்ளார். அதில், இப்படியொரு சம்பவம் நடக்கும் என்று நான் கனவில் கூட இதை நினைத்து பார்த்ததில்லை என்று சமந்தா பதிவிட்டுள்ளார்.

    2021 ஆம் ஆண்டு வெளியான புஷ்பா படத்தில் இடம்பெற்ற இப்பாடல் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×