என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
அமரன் படக்குழுவை பாராட்டிய அண்ணாமலைக்கு, சிவகார்த்திகேயன் நன்றி
- அண்ணன் அண்ணாமலைக்கு நன்றி என்று கூறிய சிவகார்த்திகேயன்.
- முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை யுகங்களுக்கு உத்வேகம் தரும் கதை.
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி நடித்த, 'அமரன்' திரைப்படம் நேற்று வெளியானது. மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தில், முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனும், முகுந்தின் மனைவி இந்து ரெபேக்கா கதாபாத்திரத்தில், சாய் பல்லவியும் நடித்துள்ளனர்.
சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படத்தை பார்த்த தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தனது எக்ஸ்தள பக்கத்தில் மேஜர். முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை யுகங்களுக்கு உத்வேகம் தரும் கதை. 2014 இல் அவர் நம் தேசத்துக்காக செய்த இறுதித் தியாகம், எங்களுக்குள் ஏதோ ஒன்றை இழந்துவிட்டோம் என்ற உணர்வை நம் அனைவரையும் ஏற்படுத்தியது.
நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் படக்குழுவினருக்கு நன்றி. இந்த அசாதாரண திரைப்படத்திற்கு நன்றி. இந்திய ஆயுதப்படை வாழ்க! நீங்கள் தான் சிறந்தவர்கள் என்று பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன், அண்ணன் அண்ணாமலைக்கு நன்றி என்று கூறியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.