என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
வேணாம் பாடாதீங்க.. வடிவேலு காமெடி சொல்லி, நானியை காப்பாற்றிய எஸ்ஜே சூர்யா - வீடியோ வைரல்
- நானி, பிரியங்கா மோகன் நடித்துள்ள புதிய படம் சூர்யாஸ் சாட்டர்டே.
- சூர்யாஸ் சாட்டர்டே திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் நானி. அவர் கடைசியாக நடித்து வெளியான ஹாய் நானா திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து நானி சூர்யாஸ் சாட்டர்டே என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை விவேக் ஆத்ரேயா இயக்கியுள்ளார்.
இந்த படத்தின் டிரைலர் நேற்று (ஆகஸ்ட் 18) வெளியானது. ஆகஸ்ட் 29 ஆம் தேதி இந்த படம் ரிலீசாக இருக்கும் நிலையில், படம் தொடர்பான விளம்பர நிகழ்ச்சிகளில் படக்குழு கலந்து கொண்டு வருகிறது. அந்த வரிசையில், படத்தின் நாயகன் நானி, கதாநாயகி பிரியங்கா மோகன் மற்றும் எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் சமீபத்தில் பேட்டி அளித்தனர்.
அந்த பேட்டியின் போது தொகுப்பாளர் நானியிடம் பாட்டு பாடுமாறு கேட்கிறார். உடனே இடையில் குறுக்கிட்ட நடிகர் எஸ்ஜே சூர்யா நானியை பாட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். மேலும், ஒருமுறை தான் பாடிய பாடல் வீடியோவை எடிட் செய்து ட்ரோல் செய்தனர். தற்போது உங்களையும் அதேபோல் டிரோல் செய்வார்கள் கவனமாக இருங்கள் என்று எஸ்ஜே சூர்யா நானியிடம் தெரிவித்தார்.
மேலும், வடிவேலு காமெடி காட்சி ஒன்றை நானியிடம் விளக்கிய எஸ்ஜே சூர்யா உங்களை பாட வைப்பதாக முயற்சித்து காமெடியில் வருவதை போல் உங்களது கிட்னியை எடுத்துக் கொள்வார்கள், பத்திரமாக இருங்கள் என்று எஸ்ஜே சூர்யா கூறுகிறார். இந்த சம்பவம் பேட்டியின் போது கலகலப்பை ஏற்படுத்தியது. மேலும், இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
SJ Suryah has seen the Bathroom Singer memes. ? pic.twitter.com/uGisXNuyMV
— Films and Stuffs (@filmsandstuffs) August 18, 2024
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.