search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    குடும்பத்துடன் மும்பைக்கு ஷிப்ட் ஆனது ஏன்? - முதல்முறையாக மனம் திறந்த சூர்யா
    X

    குடும்பத்துடன் மும்பைக்கு ஷிப்ட் ஆனது ஏன்? - முதல்முறையாக மனம் திறந்த சூர்யா

    • 27 வருடங்கள் கழித்து தன் பெற்றோருடன் ஒன்றாக நேரம் செலவிடுவதால் ஜோதிகா மகிழ்ச்சியாக உள்ளார்.
    • ஒரு நடிகையாக ஜோதிகாவின் வளர்ச்சியைக் கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

    1999-ஆம் ஆண்டு வெளியான பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து நடித்தனர். பின்னர் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்து 2006-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு தியா மற்றும் தேவ் என 2 குழந்தைகள் உள்ளனர்.

    தியா மற்றும் தேவ் ஆகியோர் மும்பையில் தங்கி படித்து வருகின்றனர். இதனால் சூர்யாவும் ஜோதிகாவும் மும்பையில் செட்டில் ஆகியுள்ளார்.

    நடிகர் சூர்யா தனது குடும்பத்தினருடன் மும்பைக்கு குடியேறியது குறித்து முதன்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.

    கங்குவா பட ப்ரோமோஷனில் பிசியாக உள்ள சூர்யா, தி ஹாலிவுட் ரிபோர்ட்டர் இந்தியா என்ற யூ-ட்யூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியில் மும்பையில் தனது குடும்பத்தினருடன் செட்டில் ஆனது குறித்து சூர்யா மனம் திறந்து பேசியுள்ளார்

    மும்பைக்கு குடிபெயர்ந்தது தொடர்பாக பேசிய சூர்யா, "18 - 19 வயதில் சென்னைக்கு குடிபெயர்ந்த ஜோதிகா, கிட்டத்தட்ட 27 வருடங்களாக சென்னையிலேயே வசித்தார். சென்னையில் என்னுடனும், என் குடும்பத்தோடுதான் அவர் அதிகம் இருந்துள்ளார். 18 வயது வரை மும்பையில் இருந்த ஜோதிகா பின்னர் தனது குடும்பம், நண்பர்கள் என எல்லாவற்றையும் எங்களுக்காக விட்டு கொடுத்துள்ளார்.

    27 வருடங்கள் கழித்து தன் பெற்றோருடன் ஒன்றாக நேரம் செலவிடுவதால் ஜோதிகா மகிழ்ச்சியாக உள்ளார். ஜோதிகாவிற்கு, விடுமுறை கொண்டாட்டம், நண்பர்கள் வட்டம், பொருளாதார சுதந்திரம் எல்லாமே தேவைப்பட்டுள்ளது. ஒரு ஆணுக்கு என்ன தேவையோ, அதுவே ஒரு பெண்ணுக்கும் தேவை என்பதை நான் இப்போது புரிந்து கொண்டேன்.

    ஜோதிகா அவர் குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவதை நான் எதற்காக தடுக்க வேண்டும்? நான், எனக்காக என்ற மனநிலையை முதலில் மாற்ற வேண்டும். ஏன் எப்போதும் ஒரு ஆண் எடுப்பவனாகவே இருக்க வேண்டும்? இந்த கேள்விகள்தான், மும்பைக்கு எங்களை நகர வைத்தது.

    ஒரு நடிகையாக ஜோதிகாவின் வளர்ச்சியைக் கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். அவருக்கு மேலும் பல நல்ல வாய்ப்புகள் அமையும் என நாம் நம்புகிறேன்.

    எங்கள் குழந்தைகளும் மும்பையில் படிக்க பழகிக்கொண்டார்கள். அங்கேயும் அவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்துள்ளன. நாங்கள் மும்பைக்கு குடியேறிய பின்னர் தான், ஜோதிகா பல வித்தியாசமான திரைப்படங்களில் பணியாற்றினார். குறிப்பாக, ஷைத்தான், காதல் தி கோர் போன்ற சுவாரசியமான படங்கள் அமைந்தன

    எனக்கு மாதத்தில் 10 நாட்களாவது எனக்கு விடுப்பு உள்ளது. அந்த நாட்களில் நான் குடும்பத்தினருடன் என் குழந்தைகளுடன் நான் நேரம் செலவிடுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×