என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
சின்னத்திரை நடிகை வழக்கு: அர்னவிடம் விசாரணை நிறைவு..
- சின்னத்திரை நடிகர்கள் அர்னவ்-திவ்யா கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் மாறி மாறி புகார் கூறி வருகின்றனர்.
- தற்போது போலீசார் நடிகர் அர்னவை கைது செய்துள்ளனர்.
சின்னத்திரை நடிகர் அர்னவ், தன்னுடன் தொலைக்காட்சி தொடரில் கதாநாயகியாக நடித்த நடிகை திவ்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அர்னவ் தற்போது புதிய தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார். அதில் அவருடன் நடிக்கும் கதாநாயகியுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாக கூறி கடந்த சில வாரங்களாக கணவன், மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டு உள்ளது.
இருவரும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். இதற்கிடையில் கர்ப்பிணியான தன்னை அர்னவ் தாக்கியதாக திவ்யா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த புகார் மீது போரூர் அனைத்து மகளிர் போலீசார், அர்னவ் மீது கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு சம்பந்தமாக நடிகர் அர்னவை போலீசார் விசாரணைக்கு ஆஜராகும்படி கூறியும் அவர் ஆஜராகாமல் இருந்து வந்தார். எனவே இன்று (வெள்ளிக்கிழமை) போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அர்னவுக்கு போரூர் அனைத்து மகளிர் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
இன்று விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பட்ட நிலையில் அவகாசம் கேட்டு அர்னவ் மனு அளித்துள்ளார். கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளதால் 18ஆம் தேதி ஆஜராவதாக அர்னவ் வக்கீல் தரப்பில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகர் அர்னவ் படப்பிடிப்பு தளத்தில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது.
இதைத்தொடர்ந்து, போரூர் உதவி கமிஷனர் தலைமையிலான தனிப்படை போலீசார் பூந்தமல்லி அருகே உள்ள நேமம் பகுதியில் படப்பிடிப்பு தளத்தில் இருந்த நடிகர் அர்னவ்வை கைது செய்து மாங்காடு போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர். சுமார் இரண்டு மணிநேரம் நடைபெற்ற இந்த விசாரணையை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் அர்னவை ஆஜர்படுத்த அழைத்து சென்றுள்ளனர்.