search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பழம்பெரும் நடிகர் சந்திரமோகன் காலமானார்
    X

    பழம்பெரும் நடிகர் சந்திரமோகன் காலமானார்

    • தெலுங்கில் பழம்பெரும் நடிகராக வலம் வந்தவர் சந்திரமோகன்.
    • இவர் தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

    பழம்பெரும் நடிகர் சந்திரமோகன் (82) உடல்நலக்குறைவால் காலமானார்.

    தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருந்தவர் சந்திரமோகன். இவர் 900-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பல விருதுகளை பெற்றுள்ளார். இவர் 1975-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான 'நாளை நமதே' திரைப்படத்தில் எம்.ஜி.ஆருக்கு தம்பியாக நடித்து புகழ்பெற்றார். இப்படத்தின் மூலம் இவர் தமிழிலும் அறிமுகமானார். இதேபோல் மறைந்த பழம்பெரும் நடிகர் சிவாஜி கணேசன் மகனாக 'அந்தமான் காதலி' திரைப்படத்தில் சிறப்பாக நடித்திருந்தார். தொடர்ந்து இவர் தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.


    இதயநோய் காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சந்திரமோகன், சிகிச்சை பலனின்றி இன்று (நவம்பர் 11) காலை உயிரிழந்தார். இவரது இறுதிச்சடங்கு ஐதராபாத்தில் நவம்பர் 13-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சந்திரமோகன் மறைவுக்கு தெலுங்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    Next Story
    ×