என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
ஒல்லியாக இருந்தால்தான் கதாநாயகியா? நடிகை அபர்ணா பாலமுரளி கேள்வி..
- மலையாள திரையுலகில் பிரபலமானவர் அபர்ணா பாலமுரளி.
- இவர் 'சூரரைப்போற்று' படத்தில் நடித்ததன் மூலம் கவனம் ஈர்த்தார்.
மலையாள திரையுலகின் பிரபல நடிகையாக வலம் வரும் அபர்ணா பாலமுரளி தமிழில் 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர், சர்வம் தாளமயம், தீதும் நன்றும், வீட்ல விசேஷம் போன்ற படங்களில் நடித்தார். 'சூரரைப்போற்று' படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் ஈர்த்த இவருக்கு அந்த படத்திற்காக தேசிய விருது அறிவிக்கப்பட்டது.
அபர்ணா பாலமுரளி
தற்போது 'நித்தம் ஒரு வானம்' படத்தில் நடிகர் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை அபர்னா பாலமுரளி உடல் பருமனாக இருப்பதாக உருவக்கேலிகளை சந்தித்து இருக்கிறார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் ''உடல் தோற்றத்துக்கும், திறமைக்கும் சம்மந்தம் இல்லை. நான் உடல் பருமனாக இருக்கிறேன் என்று சொல்வதை கேட்டு வருத்தப்பட்டு இருக்கிறேன். ஆனால் இப்போது அப்படி பேசுவதை கண்டு கொள்வது இல்லை.
அபர்ணா பாலமுரளி
ஆரோக்கிய பிரச்சினை மற்றும் வேறு காரணங்களால் உடல் எடையில் மாற்றங்கள் வரலாம். நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே பலர் என்னை ஏற்றுக்கொண்டு உள்ளனர். பிரபலத்துக்கும், தோற்றத்துக்கும் தொடர்பு இல்லை. திறமைதான் முக்கியம். ஒல்லியாக இருந்தால் தான் கதாநாயகி வாய்ப்பு வரும் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை'' என்று கூறியுள்ளார்.