search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ஐஸ்வர்யா வீட்டில் நகை திருட்டு.. கைதானவர்களுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்
    X

    ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

    ஐஸ்வர்யா வீட்டில் நகை திருட்டு.. கைதானவர்களுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்

    • ஐஸ்வர்யா வீட்டு வேலைக்காரப் பெண் ஈஸ்வரி மற்றும் வெங்கடேசன் இருவரிடம் இருந்தும் 100 பவுன் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன.
    • ஐஸ்வர்யா அளித்த 2-வது புகாரில் தனது வீட்டில் மொத்தமாக 200 பவுன் நகை கொள்ளை போனதாக குறிப்பிட்டு இருந்தார்.

    நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவின் வீட்டில் லாக்கரில் இருந்த நகைகளை வேலைக்காரப் பெண் ஈஸ்வரி, டிரைவர் வெங்கடேசன் என்பவருடன் சேர்ந்து சிறிது சிறிதாக திருடி தனது வீட்டில் பதுக்கி வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து ஈஸ்வரி, வெங்கடேசன் இருவரிடம் இருந்தும் 100 பவுன் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன.

    ஐஸ்வர்யா புகாரில் தெரிவித்து இருந்ததைவிட கூடுதலாக நகைகள் கிடைத்ததால் அதுதொடர்பான விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தினர். இதையடுத்து வேலைக்காரப் பெண்ணான ஈஸ்வரி ரஜினி, தனுஷ் வீடுகளிலும் நகைகளை திருடி இருக்கலாமோ? என்கிற சந்தேகம் ஏற்பட்டது.

    இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் ஐஸ்வர்யாவை தொடர்பு கொண்டு வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் எவ்வளவு? என்பது பற்றிய விவரங்களை முழுமையாக கணக்கு பார்த்து தெரிவிக்குமாறு கேட்டனர். இதை தொடர்ந்து ஐஸ்வர்யா, தனது வீட்டில் இருந்த நகைகள் பற்றிய விவரங்கள் அனைத்தையும் முழுமையாக ஆராய்ந்து அதன் பின்னர் 2-வதாக புதிய புகார் ஒன்றையும் அளித்திருந்தார்.

    ஐஸ்வர்யா அளித்த 2-வது புகாரில் தனது வீட்டில் மொத்தமாக 200 பவுன் நகை கொள்ளை போனதாக குறிப்பிட்டு இருந்தார். இது தொடர்பாக புதிய வழக்கை போலீசார் பதிவு செய்துள்ளனர். ஐஸ்வர்யா 2-வது அளித்த புகாருக்கு பிறகே போலீசார் ஈஸ்வரி, வெங்கடேசன் இருவரையும் காவலில் எடுத்து விசாரித்தனர். இதில் 45 முதல் 50 பவுன் நகை வரையில் ஈஸ்வரியிடம் இருந்து கைப்பற்றப்பட்டது. டிரைவர் வெங்கடேசனிடமிருந்து ரூ.45 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    போலீஸ் காவலில் ஈஸ்வரி, வெங்கடேசன் இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. 2 நாள் காவலுக்கு பிறகு இருவரும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், ஈஸ்வரி, வெங்கடேசனுக்கு ஜாமின் மனு கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இருவருக்கும் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

    Next Story
    ×