என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
கமல் என்றால் சின்ன பயம் இருக்கும் - ஏ.ஆர்.முருகதாஸ்
- தீனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஏ.ஆர்.முருகதாஸ் பல படங்களை இயக்கியுள்ளார்.
- இவர் தயாரிப்பில் உருவாகியுள்ள '1947- ஆகஸ்ட் 16' படம் வருகிற ஏப்ரல் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
அஜித் நடிப்பில் வெளியான தீனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஏ.ஆர்.முருகதாஸ். அதன்பின்னர் விஜயகாந்த்தின் ரமணா, சூர்யாவின் கஜினி, 7ஆம் அறிவு, விஜய்யின் துப்பாக்கி, கத்தி, சர்கார், ரஜினியின் தர்பார் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ்
இதற்கிடையில் 'ஏ.ஆர் முருகதாஸ் ப்ரொடைக்ஷன்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் முருகதாஸ் நடத்தி வருகிறார். இவர் தயாரிப்பில் வெளியான 'எங்கேயும் எப்போதும்', 'ராஜா ராணி', 'மான் கராத்தே', 'ரங்கூன்' போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.
தற்போது ஏ.ஆர் முருகதாஸ் தயாரிப்பில் கௌதம் கார்த்திக் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் '1947- ஆகஸ்ட் 16'. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம் இணை இயக்குனராக பணியாற்றிய என்.எஸ்.பொன்குமார் இயக்கியுள்ளார். அறிமுக நாயகி ரேவதி நடிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது.
ஏ.ஆர்.முருகதாஸ் -கௌதம் கார்த்திக்
இதையடுத்து சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிடம் கமலை வைத்து படம் எடுக்க வேண்டும் என்றால் உங்களிடம் சப்ஜெக்ட் இருக்கிறதா..? என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு அவர் கூறியதாவது, "பொதுவாகவே கமல் என்றால் எனக்கு அப்போது இருந்தே சிறிய பயம் இருக்கும். ஆனால், எல்லா இயக்குனருக்கும் கமலை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
ஏனென்றால் கமல் சாரை வைத்து படம் இயக்கும் இயக்குனர்களுக்கு அந்த படம் தான் அவர்களது கேரியரில் மிகச்சிறந்த படமாக இருக்கும். திரைத்துறையில் சிறந்த இருபது இயக்குனர்களை எடுத்துக் கொண்டால் அவர்களது கேரியர் பெஸ்ட் பிலிம் கமல் சாரோட படமாகதான் இருக்கனும். இதில் நான் சாதாரண படத்தை எடுத்திவிடக் கூடாது என்ற பயத்தில் தான் இதை செய்யவில்லை" என்று கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்