search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பாண்டிய, சோழர்கள் ஆன்மிக சிந்தனை மெய்சிலிர்க்க வைத்தது- ராஜமவுலி
    X

    ராஜமவுலி

    பாண்டிய, சோழர்கள் ஆன்மிக சிந்தனை மெய்சிலிர்க்க வைத்தது- ராஜமவுலி

    • ஆர்.ஆர்.ஆர். படத்திற்கு பிறகு இயக்குனர் ராஜமவுலி, மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்க உள்ளார்.
    • இதனிடையே ராஜமவுலி தமிழ்நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார்.

    பாகுபலி மற்றும் ராம்சரன், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் வெளியான ஆர்.ஆர்.ஆர். உள்ளிட்ட படங்களின் மூலம் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக இருப்பவர் இயக்குனர் ராஜமவுலி. ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ரசிகர்களை கவர்ந்து ஆஸ்கர் உள்ளிட்ட உலகின் பல்வேறு விருதுகளை வாங்கி குவித்தது.

    தொடர்ந்து ராஜமவுலி அடுத்து இயக்கும் படம் குறித்து பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆர்.ஆர்.ஆர். படத்திற்கு பிறகு இயக்குனர் ராஜமவுலி, மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் பேசிய ராஜமவுலி இந்த படம் ஒரு உலகளாவிய அதிரடி சாகச படமாக இருக்கும் என்று கூறியிருந்தார்.


    இயக்குனர் ராஜமவுலி கடந்த ஜூன் மாதம் தமிழ்நாட்டு கோவில்களுக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நீண்ட நாட்களாக தமிழ்நாட்டிற்குள் சுற்றுலாப் பயணம் செல்ல விரும்பினேன். என் மகள் கோவில்களுக்குச் செல்ல விரும்பினாள். அதனால் ஜூன் கடைசி வாரத்தில் ஸ்ரீரங்கம், தாராசுரம், பிரகதீஸ்வரர் கோயில், ராமேஸ்வரம், கானாடுகாத்தான், தூத்துக்குடி, மதுரை ஆகிய இடங்களுக்குச் சென்றோம். நேர்த்தியான கட்டிடக்கலை, அற்புதமான பொறியியல் மற்றும் பாண்டியர்கள், சோழர்கள் நாயக்கர்கள் மற்றும் பல ஆட்சியாளர்களின் ஆழ்ந்த ஆன்மிக சிந்தனை மெய்சிலிர்க்க வைத்தது.

    மந்திரக்கூடம், கும்பகோணம், ராமேஸ்வரத்தின் முருகன் மெஸ் என எல்லா இடங்களிலும் உணவு அருமையாக இருக்கும்... ஒரு வாரத்தில் 2-3 கிலோ எடை அதிகரித்திருக்கும். 3 மாத வெளிநாட்டு பயணம் மற்றும் உணவுக்குப் பிறகு, இந்த தாயகம் சுற்றுப்பயணம் புத்துணர்ச்சியையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.



    Next Story
    ×