search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும்- ஜி.வி.பிரகாஷ் கண்டனம்
    X

    சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும்- ஜி.வி.பிரகாஷ் கண்டனம்

    • மர்ம கும்பல் சின்னத்துரை, சந்திராசெல்வி ஆகிய 2 பேரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர்.
    • இவர்கள் இருவருக்கும் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    நாங்குநேரி பெருந்தெருவை சேர்ந்தவர் முனியாண்டி. இவருடைய மனைவி அம்பிகா. இவர்களுக்கு சின்னத்துரை (வயது 17) என்ற மகனும், சந்திராசெல்வி (14) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் வள்ளியூரில் உள்ள பள்ளிக் கூடத்தில் படித்து வருகின்றனர். இவர்களது வீட்டில் புகுந்த மர்ம கும்பல் சின்னத்துரை, சந்திராசெல்வி ஆகிய 2 பேரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர். படுகாயமடைந்த இவர்கள் இருவரையும் உறவினர்கள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.


    இந்த சம்பவத்தின் முதற்கட்ட விசாரணையில், சின்னத்துரையை அவர் படிக்கும் அதே பள்ளியை சேர்ந்த பிளஸ்-2 மாணவர்கள் சிலர் சிகரெட் வாங்கி வருமாறு அடிக்கடி கூறி வந்ததாகவும், இதனால் மனம் உடைந்த சின்னத்துரை கடந்த ஒரு வாரமாக பள்ளிக்கு செல்லாமல் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து சின்னத்துரை பெற்றோர் தலைமையாசிரியரிடம் புகார் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த பிளஸ்-2 மாணவர்கள் சின்னத்துரை மற்றும் அவர் சகோதரியை வீடு புகுந்து அரிவாளால் வெட்டியது தெரியவந்தது. இதுதொடர்பாக அந்த மாணவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "தம்பி சின்னத்துரை விரைவில் குணமடைய வேண்டுகிறேன். சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும்" என்று ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ளார்.




    Next Story
    ×