search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நடக்குற நட புயலாச்சே.. ஜெயிலர் இசை வெளியீட்டு விழா அதிகாரப்பூர்வ அறிவிப்பு
    X

    நடக்குற நட புயலாச்சே.. ஜெயிலர் இசை வெளியீட்டு விழா அதிகாரப்பூர்வ அறிவிப்பு

    • நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

    இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 'ஜெயிலர்' படத்தின் 'காவாலா' மற்றும் 'இது டைகரின் கட்டளை' பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.


    இந்நிலையில், 'ஜெயிலர்' படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 28-ஆம் தேதி சென்னை, நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.




    Next Story
    ×