என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
காவாலா பாடல் தெலுங்கு வெளியீட்டு நிகழ்ச்சியை ரத்து செய்த ஜெயிலர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
- ரஜினி நடித்துள்ள திரைப்படம் 'ஜெயிலர்'.
- இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 'ஜெயிலர்' படத்தின் 'காவாலா' மற்றும் 'இது டைகரின் கட்டளை' பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
ஜெயிலர் பதிவு
'ஜெயிலர்' படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 28-ஆம் தேதி சென்னை, நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இதையடுத்து 'காவாலா' பாடலை படக்குழு ஒவ்வொரு மொழியிலும் வெளியிட தயாராகி வருகிறது. இந்நிலையில், தெலுங்கானாவில் இன்று நடைபெறவிருந்த 'காவாலி' பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும், இந்த பாடல் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தெலுங்கு ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
The vibe material #Kaavaali drops at 4 PM today!?@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @tamannaahspeaks @sindhujas13 @srisaikiran2 @AlwaysJani @AsianCinemas_ #Jailer pic.twitter.com/yDTFCcNOhS
— Sun Pictures (@sunpictures) July 26, 2023