search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பாடப்புத்தகத்தில் விஜயகாந்த் பற்றி தலைப்புகள் இடம் பெறவேண்டும்- ஜெயம் ரவி கோரிக்கை
    X

    பாடப்புத்தகத்தில் விஜயகாந்த் பற்றி தலைப்புகள் இடம் பெறவேண்டும்- ஜெயம் ரவி கோரிக்கை

    • நடிகர் விஜயகாந்த் கடந்த மாதம் உடல்நலக்குறைவால் காலமானார்.
    • நடிகர் சங்கம் சார்பில் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கான இடத்தை பிடித்தவர் விஜயகாந்த். கடந்த சில வருடங்களாக உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் அரசியல் மற்றும் சினிமாவில் இருந்து விலகினார். இவர் கடந்த டிசம்பர் 28-ந் தேதி உடல் நலக்குறைவினால் காலமானார். இவரது மறைவு தமிழகம் முழுவதும் உள்ள மக்களை பெரிதும் பாதித்தது. இவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர்.


    மேலும் அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் நேரிலும், சமூக வலைதளத்தின் மூலமாகவும் அஞ்சலி செலுத்தினர். இவரது உடல் தேமுதிக அலுவலகத்தில் டிசம்பர் 29-ந் தேதி 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அன்றுமுதல் பல பிரபலங்கள், தொண்டர்கள், ரசிகர்கள் என பலர் அங்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இதனயடுத்து நடிகர் சங்கம் சார்பில் நடிகர் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்னை காமராஜர் அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த இரங்கல் கூட்டத்தில் முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் பங்கேற்று விஜயகாந்த் குறித்து தங்களது நினைவுகளை பகிர்ந்துகொண்டனர்.


    இதில் நடிகர் ஜெயம் ரவி பேசியதாவது, எல்லோரும் இறந்த பின்னர் கடவுளாக மாறுவார்கள் என்பார்கள் ஆனால், விஜயகாந்த் வாழும் போதே கடவுளாக இருந்தார். எனக்கு ஒரே ஒரு கோரிக்கை தான் பள்ளி பாடப்புத்தகத்தில் கேப்டன் 'விஜயகாந்த்' பற்றி வரவேண்டும். வேறு எதற்காகவும் இல்லை மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்ற சின்ன ஒரு தலைப்பில் இருக்க வேண்டும். மனிதன் இப்படி வாழ்ந்தால் மக்கள் மனதில் வைத்திருப்பார்கள், அப்படி சொன்னாலே போதும். சத்ரியனுக்கு சாவில்லை என்று பேசினார்.

    Next Story
    ×