search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    லியோ படத்தின் அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
    X

    லியோ

    'லியோ' படத்தின் அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

    • லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் லியோ.
    • இப்படத்தின் புதிய அப்டேட்டை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கொடுத்துள்ளார்.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    லியோ

    இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், 'லியோ' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்தது. காஷ்மீர் படப்பிடிப்பு குறித்து தொழில்நுட்ப பணியாளர்கள் தங்களது கருத்துகளை பகிரும் அந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வைரலானது.


    லியோ

    இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் லியோ படம் குறித்த அப்டேட் கொடுத்துள்ளார். அதன்படி தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட லோகேஷிடம் 'லியோ' படம் குறித்த அப்டேட் வழங்குமாறு கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், 'லியோ' படத்தின் படப்பிடிப்பு அடுத்த 60 நாட்களில் முடிவடைந்து விடும் என்றும், இந்த படம் மிகச்சிறப்பான ஆக்ஷன் படமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

    Next Story
    ×