என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
பவன் கல்யாண் தான் ஆந்திர முதல்வர்.. பிரபல நடிகை பரபரப்பு ட்வீட்
- ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வருகிறது.
- பா.ஜ.க. கூட்டணியில் ஜனசேனா கட்சித் தலைவர் நடிகர் பவன் கல்யாண் இடம் பெற்றுள்ளார்.
நடிகர் பவன் கல்யாண் நடித்த 'ப்ரோ' சினிமா கடந்த 28-ந் தேதி வெளியிடப்பட்டது. இதில் நடிகை ஊர்வசி ரவுடேலா நடித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், உலகம் முழுவதும் வெளியாகும் எங்கள் திரைப்படத்தில் மதிப்பிற்குரிய ஆந்திர முதல்வர் பவன் கல்யாண் உடன் திரை இடத்தைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் ஜெகன்மோகன் ரெட்டியை விட பவன் கல்யாண் விருப்பமான தலைவர் என ரசிகர்களின் கேள்விக்கு அவர் பதில் அளித்துள்ளார். இதற்கு பவன் கல்யாண் ரசிகர்கள் வரவேற்பு அளித்து தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஆந்திர முதல்வர் பவன் கல்யாண் என பதிவிட்டு இருப்பது இன்னும் நீக்கப்படவில்லை அதனை உடனடியாக நீக்க வேண்டுமென அரசியல் கட்சி பிரமுகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வருகிறது. பா.ஜ.க. கூட்டணியில் ஜனசேனா கட்சித் தலைவர் நடிகர் பவன் கல்யாண் இடம் பெற்றுள்ளார். அந்த கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
இந்த நிலையில் நடிகை ஆந்திர முதல்வர் பவன் கல்யாண் என பதிவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.