search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    எம்.பி.பி.எஸ். சீட்வாங்கி தருவதாக ஏமாற்றிய ஜெமினிகணேசன் பேரனின் மனைவி.. 5 பிரிவுகளில் வழக்கு
    X

    அபர்ணா

    எம்.பி.பி.எஸ். சீட்வாங்கி தருவதாக ஏமாற்றிய ஜெமினிகணேசன் பேரனின் மனைவி.. 5 பிரிவுகளில் வழக்கு

    • சின்னத்திரை நடிகைகள் மற்றும் தொகுப்பாளர்களுக்கு ஆடை வடிவமைப்பு செய்து கொடுத்து வருகிறார் மஞ்சு.
    • மஞ்சு கடந்த ஜனவரி மாதம் 5 லட்சம் ரூபாயை அபர்ணா வங்கி கணக்கிற்கு செலுத்தியிருக்கிறார்.

    சென்னை மேற்கு மாம்பலம் ஆற்காடு சாலையை சேர்ந்தவர் மஞ்சு. ஆடை வடிவமைப்பு தொழில் செய்து வருகிறார். சின்னத்திரை நடிகைகள் மற்றும் தொகுப்பாளர்களுக்கு ஆடை வடிவமைப்பு செய்து கொடுத்து வரும் மஞ்சுவுக்கு 2 மகள்கள் உள்ளனர். நடிகர் ஜெமினி கணேசன் மற்றும் நடிகை சாவித்திரியின் பேரனான நடிகர் அபிநய் மனைவி அபர்ணா ஆகியோர், மஞ்சுவிடம் வாடிக்கையாளராக நன்றாக பழகி வந்துள்ளனர்.

    மஞ்சுவின் மகள் லாவண்யா ஸ்ரீ நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்ததை அறிந்த அபர்ணா ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் தனக்கு தெரிந்த நண்பர் இருப்பதாகவும் 20 லட்சம் ரூபாய் கொடுத்தால் லாவண்யா ஸ்ரீக்கு மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கி விடலாம் எனவும் கூறி இருக்கிறார். முதற்கட்டமாக 5 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்து மருத்துவ சீட்டை புக் செய்து ரசீது பெற்றுக் கொள்ளலாம் என அபர்ணா கூறியுள்ளார். மீதி பணத்தை கல்லூரியில் சேர்ந்த பின்பு செலுத்திக் கொள்ளலாம் எனவும் கூறி இருக்கிறார்

    இதனை நம்பிய மஞ்சு கடந்த ஜனவரி மாதம் 5 லட்சம் ரூபாயை அவரது வங்கி கணக்கிற்கு செலுத்தியிருக்கிறார். பணத்தை பெற்றுக் கொண்ட அபர்ணா 5 நாட்களுக்கு பிறகு வாட்ஸ் அப்பில் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து விட்ட தாக சான்றிதழ் ஒன்றை அனுப்பி இருக்கிறார்.

    அந்த சான்றிதழை எடுத்துக் கொண்டு ராமச்சந்திரா மருத்துவ கல்லூரிக்கு சென்று மகளை சேர்ப்பதற்காக மஞ்சு சென்றபோது, அது போலியான சான்றிதழ் என மஞ்சுவுக்கு தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மஞ்சு, தான் கொடுத்த பணத்தை அபர்ணாவிடம் திரும்ப கேட்டுள்ளார்.

    அப்போது 5 லட்சம் ரூபாய் பணத்தை தன் தம்பி வங்கிக் கணக்கிற்கு தான் அனுப்பியதாகவும், தனது தம்பியிடம் சென்று வாங்கிக் கொள்ளுமாறும் அபர்ணா கூறி அலைக்கழித்து உள்ளார். தொடர்ந்து பல்வேறு காரணங்களை கூறி அபர்ணா இழுத்தடித்ததால் மஞ்சு மாம்பலம் போலீசில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் அபர்ணா மீது 403, 406, 420, 465, 471, 120 பி ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    இதேபோன்று அபர்ணா எவ்வளவு பேரிடம் மோசடி செய்துள்ளார் என்பது குறித்து விசாரணை நடத்தி வரும் மாம்பலம் போலீசார் அவரை கைது செய்ய தீவிரமாக தேடி வருகின்றனர். இதேபோன்று அபர்ணா வேறுயாரிடமும் மோசடி செய்துள்ளாரா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அபர்ணாவை கைது செய்ய போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    Next Story
    ×