என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
அரசியல்வாதிகள் சினிமா விமர்சனங்களை தவிர்க்க வேண்டும்.. நடிகர் சிரஞ்சீவி பேச்சு
- தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடிகர் சிரஞ்சீவி நடித்த வால்டர் வீரய்யா திரைப்படத்தின் 200-வது நாள் விழா நடைபெற்றது.
- இதில் படக்குழுவினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடிகர் சிரஞ்சீவி நடித்த வால்டர் வீரய்யா திரைப்படத்தின் 200-வது நாள் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதில் நடிகர் சிரஞ்சீவி பேசியதாவது, அரசியல்வாதிகள் தங்களது பெருமைகளை பேசுவதற்காக சினிமா துறையை விமர்சனம் செய்ய வேண்டாம்.
மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து பெறுவது,மாநில வளர்ச்சி திட்டங்கள், வேலை வாய்ப்பு உருவாக்குவது, சாலைகள் அமைப்பது, உள்கட்டமைப்பை உருவாக்குவது போன்றவற்றில் கவனம் செலுத்தினால் தான் மக்கள் பாராட்டை பெறுவீர்கள். அதை விட்டுவிட்டு சினிமா துறை குறித்து தேவையற்ற விமர்சனம் செய்ய வேண்டாம் என்றார்.
சிரஞ்சீவி பேச்சுக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரசார் கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்துள்ளனர். சிரஞ்சீவியின் தம்பியும் நடிகருமான பவன் கல்யாண் நடித்து வெளியான ப்ரோ திரைப்படம் குறித்தும், நடிகர் பவன் கல்யாண் குறித்தும்,அந்த படம் எடுப்பதற்கு கருப்பு பணம் பயன்படுத்தப்பட்டது எனவும், அதன் வருவாய் குறித்தும் ஆந்திர மாநில நீர்பாசனத்துறை அமைச்சர் அம்படி ராம்பாபு மற்றும் அமைச்சர்கள் சமீபத்தில் விமர்சனம் செய்திருந்தனர். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக நடிகர் சிரஞ்சீவி பேச்சு உள்ளதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.