search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தென்னிந்திய சினிமாவில் இதுவே முதல்முறை.. பொன்னியின் செல்வன் -2 அப்டேட்
    X

    பொன்னியின் செல்வன்

    தென்னிந்திய சினிமாவில் இதுவே முதல்முறை.. 'பொன்னியின் செல்வன் -2' அப்டேட்

    • ’பொன்னியின் செல்வன் -2’ திரைப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

    மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான படம் பொன்னியின் செல்வன்-1. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று சில விருதுகளையும் குவித்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    பொன்னியின் செல்வன் -2

    இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும், இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது. இந்நிலையில், தென்னிந்திய சினிமாவில் முதல்முறையாக 4DX தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ள முதல் திரைப்படம் 'பொன்னியின் செல்வன் -2' என்று படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளது.


    பொன்னியின் செல்வன் -2 போஸ்டர்

    இதற்கு முன்பு 'பொன்னியின் செல்வன்' முதல் பாகம் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.


    Next Story
    ×