என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
செல்வராகவன் கொடுத்த நானே வருவேன் படத்தின் அப்டேட்
- செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் நானே வருவேன்.
- இப்படம் குறித்து இயக்குனர் செல்வராகவன் புதிய அப்டேட் கொடுத்துள்ளார்.
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் 'நானே வருவேன்'. இந்த திரைப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் நாயகியாக இந்துஜா நடிக்கிறார். இப்படத்தில் எல்லி அவுரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகை முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இதன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை தனுஷ் சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நானே வருவேன் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை படக்குழு தொடங்கியுள்ளதாக இயக்குனர் செல்வராகவன் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். அதனுடன் ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
#NaaneVaruven #postproduction pic.twitter.com/ow2QsX0FSM
— selvaraghavan (@selvaraghavan) June 7, 2022