search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    மறைந்த பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி
    X

    வாணி ஜெயராம் - மு.க. ஸ்டாலின்

    மறைந்த பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி

    • தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் நேற்று காலமானார்.
    • இவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

    தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் (வயது 78). இவர் கடந்த 1974-ம் ஆண்டு வெளியான தீர்க்க சுமங்கலி என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு பாடகியாக அறிமுகமானார். பின்னர், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். சமீபத்தில் இவருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது.

    வாணி ஜெயராம்


    நேற்று சென்னையில் உள்ள தனது வீட்டில் பாடகி வாணி ஜெயராம் தவறி விழுந்து உயிரிழந்தார். இதனை போலீசார் மர்ம மரணம் என வழக்கு பதிவு செய்து உள்ளனர். வாணி ஜெயராம் மறைவுக்கு தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் சென்னை, பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் இன்று தகனம் செய்யப்பட உள்ளது.


    நேரில் சென்று அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்


    இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வாணி ஜெயராம் மறைவால், திரையுலகமே அதிர்ச்சியில் உள்ளது என்றும் பல்வேறு மொழிகளில் 10,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி சாதனை படைத்தவர் வாணி ஜெயராம் என்றும் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×