search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நடிகை துனிஷா தற்கொலை வழக்கு.. ஷீசன் கானுக்கு ஜாமின்..
    X

    துனிஷா சர்மா - ஷீசன் கான்

    நடிகை துனிஷா தற்கொலை வழக்கு.. ஷீசன் கானுக்கு ஜாமின்..

    • நடிகை துனிஷா சர்மா கடந்த ஆண்டு படப்பிடிப்பு தளத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இந்த தற்கொலை தொடர்பாக 500 பக்க குற்றப்பத்திரிக்கையை போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

    பிரபல தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகையான துனிஷா சர்மா, கடந்த ஆண்டு டிசம்பர் 14-ஆம் தேதி அலிபாபா தஸ்தான்-இ-காபூல் என்ற தொலைக்காட்சி தொடருக்கான படப்பிடிப்பு தளத்தில் கலந்து கொண்டபோது, திடீரென தூக்கு போட்டு உயிரிழந்த நிலையில், போலீசார் அவரது உடலை கண்டெடுத்தனர். அவரது மரணம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியது.


    துனிஷா சர்மா

    காதல் தோல்வியால் அவர் தற்கொலை செய்து கொண்டார் என பரபரப்பாக பேசப்பட்டது. நடிகை துனிஷாவை தற்கொலைக்கு தூண்டினார் என்று அவரது தாயார் அளித்த புகாரின் பேரில், சக நடிகரான ஷீசன் கான் என்பவரை வாலிவ் நகர போலீசார் கைது செய்து, கொலை மற்றும் தற்கொலை என்ற கோணங்களில் இந்த வழக்கை விசாரித்து வந்தனர்.


    துனிஷா சர்மா - ஷீசன் கான்

    இந்த தற்கொலை தொடர்பாக 500 பக்க குற்றப்பத்திரிக்கையை போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்நிலையில், சிறையில் உள்ள தனக்கு இந்த வழக்கில் ஜாமின் வழங்கும்படி நடிகர் ஷீசன் கான் மும்பை வசாய் செசன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த ஜாமின் மனுவை நேற்று விசாரித்த நீதிமன்றம் நடிகர் ஷீசன் கானுக்கு ஜாமின் வழங்கியது.


    ஷீசன் கான்

    1 லட்ச ரூபாய் பிணையில் ஷீசன் கானுக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. மேலும், அவர் தன் பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் அனுமதியின்றி வெளிநாடு செல்லக்கூடாது என்றும் நிபந்தனை விதித்தது. நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டதையடுத்து ஷீசன் கானுக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. ஜாமின் வழங்கப்பட்டதையடுத்து தானே சிறையில் இருந்து நடிகர் ஷீசன் கான் இன்று விடுதலை செய்யப்பட்டார்.

    Next Story
    ×