search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    வாரிசு இசை வெளியீட்டு விழா.. தயாரிப்பு நிறுவனத்துக்கு அபராதம்..?
    X

    வாரிசு

    'வாரிசு' இசை வெளியீட்டு விழா.. தயாரிப்பு நிறுவனத்துக்கு அபராதம்..?

    • வாரிசு இசை வெளியீட்டு நேற்று முன்தினம் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.
    • இதில் தமிழகத்தில் இருந்து பல ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

    வம்சி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் 'வாரிசு' திரைப்படம் வருகிற பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று முன்தினம் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.


    வாரிசு இசை வெளியீட்டு விழா

    இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்த பல ரசிகர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், ரசிகர்கள் பலர் உற்சாக மிகுதியால் அதிகப்படியான இருக்கைகளை சேதப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து சேதம் குறித்த கணக்கெடுப்பு நடத்திய பின் 'வாரிசு' பட தயாரிப்பு நிறுவனத்திடம் உரிய அபராதம் வசூலிக்கப்படும் என்று நேரு உள் விளையாட்டரங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Next Story
    ×