என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
மீண்டும் கமலுடன் இணையும் விஜய் சேதுபதி?
- கமல், தற்போது இந்தியன்-2 படத்தில் தீவிரம் காட்டி வருகிறது.
- கமல் படத்தில் மீண்டும் விஜய் சேதுபதி இணையவுள்ளதாக கூறப்படுகிறது.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான கமல், தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தை தொடர்ந்து கமல், புராஜெக்ட் கே படத்தில் நடிக்கிறார். இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன், திஷா பதானி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை தொடர்ந்து கமல், எச்.வினோத் இயக்கத்தில் "கேஎச்233" படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தின் பணிகளில் இயக்குனர் எச்.வினோத் மும்முரம் காட்டி வருகிறார். இந்நிலையில் இப்படத்தின் மூலம் விஜய் சேதுபதி, கமலுடன் மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் யோகி பாபு நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. விக்ரம் படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி-கமல் கூட்டணி இணையவுள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.